சென்னை: கருணை மிகு தாய் , தூண்போன்ற மனைவி, தன்னம்பிக்கை மிக்க மகள் கிடைக்க நான் மிகவும்
கொடுத்து வைத்தவன் என்று காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.கஸ்டாலின் கூறினார்.
காஞ்சிபுரத்தில் இன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது மிகவும் உருக்கமாக பெண்களின் நிலை குறித்து விவரித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பேச்சிலிருந்து...
ஒர் ஆணின் வெற்றிக்கவும், குழந்தைகளின் கல்விக்காகவும் பெண்கள் எத்தனை மணி நேரம் உழைத்திருப்பார்கள். அதற்கொல்லாம் கணக்கிட்டு ஊதியம் கொடுத்தால் எவ்வளவு கொடுப்பது. ஆனால் உங்க மனைவி என்ன பண்றாங்கனு கேட்டா, சொல்லுவாங்க "ஹவுஸ் ஒய்ப்" என்று. அதுலயும் சும்மா தான் இருக்காங்கனு செல்லுவாங்க. பெண்கள் வீட்டில் சும்மாவா இருப்பாங்க. வீட்டு வேலை பார்க்குறதுக்கு எதுவும் கொடுப்பது கிடையாது. ஆனால் மகளிருக்கு ஆன உழைப்பை அங்கீகரிக்க உருவாக்கப்பட்ட திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமை திட்டம்.
தாயின் கருணை, மனைவியின் உறுதுணை, மகளின் பேரன்பு கிடைத்தால் அதைவிட செல்வம்
வேறு தேவையில்லை. உண்மையில் ஒரு ஆணை வழிநடத்துவது தாய்மையும், பெண்மையும் தான். எனனுடைய தாய் தயாளு அம்மாள் கருணையே வடிவானவங்க. சின்ன வயதில் நான் நிகழ்ச்சி நடத்தினால்
மழை வரக்கூடாதுன்னு வேண்டுவாங்க. இன்றைக்கு அவங்க வயது முதிர்வினால் கோபாலபுர வீட்டில் இருக்காங்க.
நான் போய் பார்த்தால் எங்கம்மா முகத்தில் மகிழ்ச்சி இருக்கும். அதே போல தான் என் மனைவி தூர்காவும்.
என் வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள் இருந்தாலும் எனக்கு உறுதுணையாக இருப்பது எனது மனைவி தூர்கா தான். அடுத்தது எனது மகள் செந்தாமரை. ஒரு அரசியல்வாதியின் மகள் என்ற சாயல் விழுந்துவிடக்கூடாதுன்னு கவனமாக இருப்பார். கருணை மிகு தாய், தூண்போன்ற மனைவி, தன்னம்பிக்கையான மகள் கிடைக்க நான் கொடுத்து வைத்தவன் என்று பெருமையாக பேசினார் ஸ்டாலின்.
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
{{comments.comment}}