17 நாட்களில் 19 ஒப்பந்தங்கள்.. அமெரிக்க பயணத்தில் சாதனை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Sep 14, 2024,11:07 AM IST

சென்னை:   தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அமெரிக்காவுக்கு மேற்கொண்ட அரசு முறை பயணம் வெற்றிகரமானதாகவும் சாதனை மிக்கதாகவும் இருந்ததாக முதல்வர் மு க ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 


தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் அமெரிக்க சென்றார். சான்பிரான்சிஸ்கோ விமான நிலையம் வந்த முதலமைச்சருக்கு அமெரிக்காவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அங்கு 17 நாட்கள் தங்கி இருந்த முதல்வர் மு க ஸ்டாலின் சான் பிரான்சிக்கோ மற்றும் சிகாகோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு 19 புத்துணவு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளார்.




இதனை முடித்துவிட்டு நேற்று அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்திலும், அங்கிருந்து வீடு திரும்பம் வழியெங்கும்  தொண்டர்கள் முதல்வருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


அமெரிக்காவுக்கு சென்ற அரசு முறை பயணத்தை நிறைவு செய்துவிட்டு சென்னைக்கு திரும்பி இருக்கிறேன். இந்த பயணம் வெற்றிகரமானதாகவும் சாதனை மிக்கதாகவும் அமைந்திருக்கிறது. உலக நாடுகளில் இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்கள் தொழில்  முதலீடுகள் செய்யும் முயற்சியில் கடந்த 28ஆம் தேதி அமெரிக்க சென்றேன். அங்கு தங்கியிருந்த 17 நாட்களும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.அப்போது 18 நிறுவனங்கள் 19 ஒப்பந்தங்களில் கையெழுத்தான மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். 


சான் பிரான்சிக்கோவில் எட்டு நிறுவனங்களுடனும், சிகாகோவில் 11 நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த 19 ஒப்பந்தங்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு மொத்தம் 7,616 முதலீடுகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் 11,516 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகப்பட்டு இருக்கிறது. இந்த முதலீடுகள் மதுரை, திருச்சி,சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, என பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது. அமெரிக்காவில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. 


தமிழ்நாடை பொருளாதார மாநிலமாக உயர வேண்டும் என்ற இலக்குடன் தமிழ்நாட்டு நிறுவனங்களுடன் பன்னாட்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என நான் கேட்டுக்கொண்டேன். இதனையடுத்து பல முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வர விருப்பம் தெரிவித்து உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக சென்னை மறைநகரில் உற்பத்திகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் எங்கள் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் ஃபோர்டு நிறுவனம் உற்பத்தியை தொடங்க முன் வந்திருக்கிறது. ஃபோர்டு நிறுவனத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளேன்.


அதேபோல் எனது கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் வழியாக வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி வழங்கக்கூடிய  ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. . அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சென்றபோது பத்து சதவீத  முதலீடுகளை கூட ஈர்க்கவில்லை. மூன்று ஆண்டுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளை குறித்து ஏற்கனவே விளக்கம் கொடுத்துள்ளேன். மூன்று ஆண்டுகள் முதலீடுகள் குறித்த விளக்கத்தை எதிர்க்கட்சித் தலைவர் படித்துப் பார்க்க வேண்டும். நூற்றுக்கு நூறு நிறைவேற்றக் கூடிய வகையில் தான் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.


அன்னபூர்ணா விவகாரம்:


தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் முதல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்துவேன். அன்னபூர்ணா உரிமையாளரிடம் நிர்மலா சீதாராமன் நடந்து கொண்டது வெட்கப்பட வேண்டிய விஷயம். ஜிஎஸ்டி குறித்து நியாயமான கோரிக்கையை அன்னபூர்ண உரிமையாளர் முன்வைத்தார். அமைச்சரவை மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு நீங்கள் எதிர்பார்க்கும் சூழல் உருவாகும் என பதிலளித்தார். மேலும் சொன்னதை தான் செய்வோம் செய்வதை தான் சொல்வோம் என கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்