"எப்புர்ரா".. பாத்தீங்களா, சென்னையில் எங்குமே தண்ணி நிக்கலை.. முதல்வர் ஸ்டாலின் ஹேப்பி!

Nov 04, 2023,07:54 PM IST

சென்னை:  சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறி விட்டது. இதற்கு திமுக ஆட்சிதான் காரணம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


சென்னை மழை என்றாலே பலருக்கும் ஈரக்குலையே நடுங்கும் அளவுக்கு டென்ஷனாகும். காரணம், வெள்ளம் வங்கக் கடலே உள்ளே வந்து விட்டதோ என்று அஞ்சும் அளவுக்கு வெள்ளத்தில் மிதக்கும் சென்னை மாநகரம். 2015 வெள்ளத்தை இந்த தலைமுறை மட்டுமல்ல, அடுத்து வரும் தலைமுறையும் கூடு மறக்க முடியாது. அந்த அளவுக்கு மிகப் பெரிய பாதிப்பை அது ஏற்படுத்தியது.


ஆனால்  தற்போது பெரிய அளவிலான மழை பெய்தால் கூட தண்ணீர் பெரும் பாதிப்பை தருவதில்லை. மாறாக கன மழை பெய்யும்போது சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கும், பிறகு வடிந்து விடுகிறது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:




சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. தி.மு க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்!


தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது.


அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெருநகர மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்குத் துணை நின்று பணியாற்றிடவும்.


மக்களுக்குச் சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க #DravidianModel அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.


சென்னை மாநகராட்சியின் சுறுசுறுப்பு




இதற்கிடையே சென்னை மாநகராட்சி மிக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. ஆணையர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் மழை பாதிக்கும் பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர். மேயர் பிரியாவும் இந்தப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அதேபோல அமைச்சர் கே.என். நேருவும் நகரின் பல்வேறு பகுதிகளையும் சுற்றிப் பார்த்து அதிகாரிகளை முடுக்கி விடுகிறார்.


கிண்டி 5 பர்லாங் சாலையில் நேற்று பெய்த கன மழையால் சாலையில் ஆறு போல வெள்ளம் ஓடியது. அது சில மணி நேரங்களில் சரி செய்யப்பட்டு தற்போது அந்த சாலை பளிச்சென காட்சி அளிக்கிறது. "எப்புர்ரா" என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அந்த இடத்தை சரி செய்து விட்டனர் மாநகராட்சி பணியாளர்கள். அதேபோல  மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எங்கெல்லாம் அதிக அளவிலான மழை நீர் தேங்கியிருந்ததோ அதையெல்லாம் தற்போது வடியச் செய்து விட்டனர் அதிகாரிகள். 


இன்று சென்னையில் பெரிதாக மழை இல்லை. காலையில் லேசாக பெய்தது. தற்போது இல்லை. இதனால் அனைத்துப் பகுதிகளிலும் மழை நீர் வடிந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. தமிழ் நிலத்தின் பெருமைகள்

news

சென்னை உள்ளிட்ட.. வடதமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

news

விண்ணை பிளக்கும் உற்சாகத்துடன் வெளியான குட் பேட் அக்லி.. விழா கோலம்பூண்ட திரையரங்குகள்..!

news

Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு

news

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?

news

தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை

news

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!

news

நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!

news

நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்