ஏப்ரல் 16ம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

Apr 13, 2025,09:14 PM IST

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏப்ரல் 16ம் தேதி அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், பதிவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.


தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஆர்.என். ரவியால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களையும் சிறப்பு அதிகாரம் மூலம், ஆளுநரின் கையெழுத்து இல்லாமலேயே உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. பல்வேறு முக்கிய அம்சங்கள் அடங்கிய இந்தத் தீர்ப்பு நாடு தழுவிய அளவில் ஆளுநர் -மாநில அரசுகளுக்கு இடையே நிலவி வரும் மிகப் பெரிய பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று கருதப்படுகிறது.




இந்தத் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து 10 மசோதாக்களும் சட்டமானது. இதுதொடர்பான அரசு கெஜட்டிலும் அறிவிக்கை வெளியானது. இந்த உத்தரவின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்யும் குழுக்களை முதல்வரே நியமிக்க முடியும். யுஜிசி பிரதிநிதியை  இதில் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை.


இந்த நிலையில் அடுத்த அதிரடியாக வருகிற 16ம் தேதி துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின்போது உயர் கல்வி மேம்பாடு தொடர்பாகவும், பல்கலைக்கழகங்களின் மேம்பாடு குறித்தும் முக்கிய ஆலோசனைகளை முதல்வர் மேற்கொள்ளவுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோடை விடுமுறையை முன்னிட்டு.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்இடிசி முடிவு..!

news

சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்.. அன்போடு அழைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 15, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

CSK vs LSG.. சென்னை சூப்பர் கிங்ஸ் அட்டகாச வெற்றி.. அசத்தலாக ஆடிய தோனி, துபே.. ரசிகர்கள் ஹேப்பி!

news

மக்களே எச்சரிக்கையாக இருங்க.. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமாம்..!

news

பாஜக கூட்டணியால்.. அதிமுகவிலிருந்து விலகிட்டாரா.. டி. ஜெயக்குமார் தரப்பு சொல்லும் விளக்கம் இதுதான்!

news

ரஜினிகாந்த் வழிக்கு மாறிய அண்ணாமலை.. பாபா முத்திரையுடன் போஸ்.. ஆன்மீக பயணம்!

news

மீன் பிடி தடைக் காலம்.. ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை அறிவிப்பு..இன்று நள்ளிரவு முதல் அமல்!

news

இந்திய சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளுக்கு.. கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

அதிகம் பார்க்கும் செய்திகள்