சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ள புதிய விதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமன முறைகள் தொடர்பாக புதிய விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. அதன்படி புதிய துணைவேந்தரைத் தேடும் குழுவை ஆளுநரே நியமிப்பார். அதற்கு அவரே தலைவராக இருப்பார். யுஜிசியின் பிரதிநிதி ஒருவரும் அதில் இடம் பெற்றிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த புதிய விதிமுறைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநர்களுக்கு அதிக அதிகாரத்தைக் கொடுத்து பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ள புதியநடைமுறைகள் மாநில அரசுகளின் உரிமைகள் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தின் மீது நடத்தப்பட்டுள்ள மிகப் பெரிய தாக்குதலாகும்.
துணைவேந்தர் பதவிகளை கல்வியாளர் அல்லாதவர்களும் வகிக்க வகை செய்யும் வகையில் யுஜிசி விதிமுறைகளைத் திருத்தியிருப்பது பேராபத்தையே விளைவிக்கும்.
மத்திய பாஜக அரசின் இந்த எதேச்சதிகார நடவடிகக்கையானது, அதிகாரத்தை மத்தியில் குவிக்கச் செய்யும் நடைமுறையாகும். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மட்டும் தட்டும் செயலாகவே இது பார்க்கப்படும்.
பாஜக அரசின் தூண்டுதலில் செயல்படும் ஆளுநர்கள் கையில் கல்வி இருக்கக் கூடாது. மாறாக கற்றறிந்த அறிஞர்கள் கையில்தான் அது இருக்க வேண்டும்.
உயர் கல்வித்துறையில் நாட்டிலேயே தலை சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அப்படிப்பட்ட மாநிலம், உயர் கல்வி நிறுவனங்களின் சுதந்திரம் இப்படி பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த அறிவிப்பானது அரசியல் சாசனத்திற்கு விரோதமானதாகும். இதை ஏற்கவே முடியாது. தமிழ்நாடு இதை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்கும், போராடும் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பொய்யைப் படிக்க வேண்டாம் என்பதால் வெளியேறிப் போயிருக்கலாம்.. ஆளுநருக்கு சீமான் ஆதரவு
ஈரோடு கிழக்கு தொகுதி.. திமுகவுக்கா அல்லது காங்கிரசுக்கா? .. காத்திருக்கும் வி.சி. சந்திரகுமார்
ஆளும் கட்சிக்கு ஒரு நீதி.. எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா? .. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி
அதிமுகவைப் பார்த்து நூறு சார் போட்டு கேள்விகள் கேட்க என்னால் முடியும்..முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி
தண்டனை (சிறுகதை)
Gold rate.. கடந்த 3 நாட்களாக அமைதிகாத்த தங்கம் விலை... இன்று திடீர் உயர்வு...!
திமுக போராடினால் வழக்கு.. பாமக போராடினால் கைதா? .. ஆஹா.. நல்லா இருக்கே .. டாக்டர் அன்புமணி
ISRO.. கன்னியாகுமரியிலிருந்து.. இன்னொரு இஸ்ரோ தலைவர்.. யார் இந்த வி. நாராயணன்?
அண்ணாநகர் பாலியல் வழக்கு.. அதிமுக செயலாளர் அதிரடி கைது.. கட்டப் பஞ்சாயத்து செய்த கொடுமை!
{{comments.comment}}