முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்த நாள்.. திமுகவினர் கொண்டாட்டம்.. பிரதமர் மோடி வாழ்த்து!

Mar 01, 2024,07:28 PM IST

சென்னை: தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது 71 வது பிறந்த நாளை இன்று சிறப்பாக கொண்டாடி வருகிறார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள்,  திமுக தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் 1953 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி பிறந்தார். இவர் 2006 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சராகவும், 2009 ஆம் ஆண்டு துணை முதல்வராகவும் பொறுப்பு வகித்தார். 

2021 ஆம் ஆண்டு மே, 7ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் எட்டாவது முதல்வராக பொறுப்பேற்றார். 




முதல்வராக பொறுப்பேற்ற நாளிலிருந்து தற்போது வரை தமிழக மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களையும், உதவிகளையும் செய்து வருகிறார். பல்வேறு புரட்சிகர திட்டங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமல்படுத்தி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்து வருகிறது


இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் தனது 71 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார் ஸ்டாலின். இதனை அடுத்து சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தில்  மரியாதை செலுத்தினார். 


இதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயம் வந்தால் முதல்வர் ஸ்டாலின். அங்கு கூடியிருந்த தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அங்கு தொண்டர்களை சந்தித்து அவர்களது வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், என பலரும் தங்கள்  வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்:




பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தி செய்தி வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து சேவையாற்ற வாழ்த்துகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர் ஸ்டாலின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.


மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் தனது எக்ஸ் தளத்தில் சமூக நீதி, மகளிர் மேம்பாடு ,தொழில் வளர்ச்சி, என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வருகிறார் முதல்வர். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர் ஸ்டாலின் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பெரியார் திடலில் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தி க தலைவர் கீ.வீரமணி இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.


இவர்கள் தவிர கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?

அதிகம் பார்க்கும் செய்திகள்