சென்னை: குமரி முனையில் வானுயர நின்று கொண்டிருக்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையை Statue Of Wisdom ஆக கொண்டாடுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மறைந்த கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டு திறக்கப்பட்ட பிரமாண்ட சிலைதான் குமரி முனையில் நின்ற நிலையில் காட்சி தரும் அய்யன் திருவள்ளுவர் சிலை. விவேகானந்தர் பாறைக்கு எதிரில் உள்ள பாறைப் பகுதியில் இந்த பிரமாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது.
கடல் நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரப் பாறை மீது கம்பீரமாக நிற்கும் இந்த சிலையானது மொத்தம் 133 அடி உயரம் (திருக்குறளின் 133 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில்) கொண்டது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 1975ம் ஆண்டு சிலை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 1979ம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இருப்பினும் எம்ஜிஆர் பதவியில் இருக்கும் வரை பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் 1990ம் ஆண்டு மீண்டும் கலைஞர் முதல்வரான பிறகு, முதல்வராக இருந்தபோது சிலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார். இடையில் ஆட்சி மாற்றம் உள்ளிட்டவை நடந்ததால் சிலையை நிறுவும் பணி 1999ம் ஆண்டுதான் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து புதிய நூற்றாண்டு பிறந்த ஆண்டான 2000மாவது ஆண்டு ஜனவரி 1ம் தேதி இந்த பிரமாண்ட சிலையை முதல்வராக இருந்த கருணநிதி திறந்து வைத்தார்.
இந்த பிரமாண்ட சிலையானது கருங்கல்லால் ஆன சிலையாகும். உலகில் இப்படி வேறு எந்த சிலையும் கட்டப்படவில்லை. அந்த வகையில் இது சாதனை சிலையும் கூட. சிலையின் உயரம் திருக்குறளை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டது என்பது விசேஷமனது. அதாவது சிலையின் பீடம் 38 அடி உயரம் கொண்டது. இது அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிப்பதாகும். அதேபோல பீடத்திற்கு மேலே உள்ள சிலையின் உயரம் 95 அடி ஆகும். இது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப் பாலின் 95 அதிகாரங்களைக் குறிப்பதாக அமைந்துள்ளது. மொத்தமாக 133 அடி உயரத்தில் இந்த பீடமும், சிலையும் அமைந்துள்ளன. சிலையின் எடை மட்டும் 2500 டன் ஆகும். பீடத்தின் எடையானது 1500 டன் ஆகும்.
இயற்கைச் சீற்றங்கள், கடல் அரிப்புகள் ஆகியவற்றால் சிலைக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் மிகச் சிறப்பாகவும், அறிவியல் தொழில்நுட்பத்துடனும் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு வீசிய சுனாமி அலைத் தாக்குதலின்போதும் கூட சிலையின் உயரத்தை சுனாமி அலைகள் தாண்டிய போதும் கூட சிலைக்கு ஒரு சிறு பாதிப்பு கூட வரவில்லை. மொத்த உலகமும் இந்தக் காட்சியைப் பார்த்து பிரமித்துப் போனது என்பதே இந்த சிலையின் சாதனைக்கு ஒரு சான்றாகும்.
தமிழர்களின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் மண்டபத்தையும் இணைக்கும் வகையில் ஒரு பிரமாண்ட கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 30ம் தேதி கன்னியாகுமரியில் திறந்து வைக்கவுள்ளார். இதற்காக டிசம்பர் 29ம் தேதிக்கு தூத்துக்குடிக்கு முதல்வர் விமானம் மூலம் வருகிறார். அங்கிருந்து 30ம் தேதி கன்னியாகுமரி வருகை தருகிறார். மாலையில் கண்ணாடிப் பாலத்தைத் திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின் லேசர் கண்காட்சியையும் தொடங்கி வைக்கிறார். மறு நாள் காலை திருவள்ளுவர் படக்காட்சியை தொடங்கி வைத்துப் பார்வையிடுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
Statue Of Wisdom
இந்த நிலையில் அய்யன் திருவள்ளுவன் சிலையின் வெள்ளி விழா தொடர்பாக முதல்வர் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில், சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு, நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயரச் சிலை அமைத்து ஆண்டுகள் ஆகிறது 25!
மூப்பிலாத் தமிழில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு முத்தமிழ் வித்தகர் கலைஞர் அமைத்த சிலையை #StatueOfWisdom-ஆகக் கொண்டாடுவோம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}