சுதந்திர தின விழா.. ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Aug 14, 2023,04:41 PM IST
சென்னை:  சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இப்போதே களை கட்டத் தொடங்கியுள்ளன. சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களின்போது ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படும்.



இதில் முதல்வர், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள். ஆனால்  ஆளுநராக ஆர். என். ரவி. வந்தது முதலே தமிழ்நாடு முதல்வருக்கும், அவருக்கும் ஒத்துப் போகவே இல்லை. ஏதாவது ஒரு பிரச்சினை, சண்டை வந்து கொண்டே இருக்கிறது.

இப்போதும் கூட சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது தந்தை ஒருவர் நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக கேள்வி எழுப்பி ஆளுநருடன் வாதத்தில் ஈடுபட்டார். அதற்கு ஆளுநர் நெவர் எவர் எப்போதும் கையெழுத்திட மாட்டேன் என்று ஆளுநர் ரவி ஆவேசமாக பதிலளித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழா தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீட் தேர்வு தொடர்பாக அனிதா தொடங்கி பல உயிர்களை தமிழ்நாடு பறி கொடுத்துள்ளது. இப்போது கூட ஜெகதீஸ்வரன் என்ற மாணவரும், அவரது தந்தையும் அடுத்தடுத்து தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளனர். தமிழ்நாடு ஆளுநரோ நீட் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து ஈவு இரக்கமின்றி பேசி வருகிறார்.  ஒருபோதும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர மாட்டேன், கையெழுத்திட மாட்டேன் என்று பேசி வருகிறார்.

பொது வெளியில் அவர் இவ்வாறு பேசியிருப்பது பெற்றோர்களையும், மாணவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீட் எதிர்ப்புப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி அவர் பேசியிருக்கிறார்.  ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பொறுப்பின்றி பேசி வருகிறார்.

பல்கலைக்கழகங்களைச் சிதைத்தும், உயர் கல்வித் துறையைக் குழப்பியும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவுகளுக்கு அனுமதி தராமலும், இதன் உச்சமாக தமிழ்நாட்டு  மாணவர்களை, பெற்றோர்களை அவர்களது எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநரை வன்மையாக கண்டிக்கிறேன். இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15ம் தேதியன்று ஆளுநர் மாளிகையில் அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தினைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்