கருணாநிதி 101: பாதை அமைத்தீர்கள்.. நாங்கள் பயணம் செய்கிறோம்.. புகழஞ்சலி செலுத்திய திமுக!

Jun 03, 2024,06:11 PM IST

சென்னை:   மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 


தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 101வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் அவரின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு க ஸ்டாலின். இவருடன் திமுக மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினார்கள்.




இதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்ற முதல்வர் மு க ஸ்டாலின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். திமுக மூத்த  அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஏ.வ வேலு, சேகர்பாபு மா.சுப்பிரமணியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள், கட்சி மூத்த நிர்வாகிகள், எம்பி கனிமொழி, உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நினைவு மலர் என்ற புத்தகத்தையும் முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.


கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலும் திமுக நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இது தவிர தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செய்வதற்கு திமுக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


கலைஞர் நினைவிடத்தில் அருங்காட்சியகம், வரலாற்று சாதனை அரங்கம், உள்ளிட்ட பல அரங்குகள் கொண்டு மிகப் பிரம்மாண்டமாக மாற்றி அமைக்கப்பட்ட கலைஞர் நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவிடத்தில் இந்த வருடம் முதல் முறையாக கருணாநிதியின் 101வது பிறந்தநாள் வருவதால், இவ்விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.  நினைவிடம் முழுவதும் மிகவும் பிரம்மாண்டமாகவும் கண்களைக் கவரக்கூடிய வகையிலும் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் வளகாத்துக்குள்ளையே அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவலைகள் என்ற தலைப்பில் கருணாநிதி குறித்த புகைப்பட கண்காட்சியையும் திறந்து வைத்து பார்வையிட்டார் முதல்வர் மு.க ஸ்டாலின். 


அங்கு கலைஞர் நினைவலைகள் என்ற தலைப்பில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று நினைவுகளை உள்ளடக்கும் வகையில் குறும்படம் ஒன்று காட்சியப்படுத்தப்பட்டது இந்தக் குறும்படம் இன்னும் ஒரு சில தினங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்