ஆளுநர் டீ பார்ட்டி.. முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு.. திமுக கூட்டணி புறக்கணிப்பு!

Aug 15, 2024,03:29 PM IST

சென்னை: ஆளுநர் ஆர். என். ரவி இன்று மாலை அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களின்போது ஆளுநர் ராஜ்பவனில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இதில் முதல்வர், அமைச்சர்கள், நீதிபதிகள், பல்துறைப் பிரமுகர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் என பல தரப்பினரும் அழைக்கப்படுவர். இது வருடா வருடம் நடைபெறும் ஒரு சம்பிரதாயம் ஆகும். இதுதவிர முக்கிய விழாக்களின்போதும் இதுபோன்ற தேநீர் விருந்துகள் நடைபெறுவது வழக்கம்.


ஆனால் ஆளுநராக ஆர்.என். ரவி வந்தது முதல் அவருக்கும் அரசுக்கும் இடையே உரசல் இருந்து வருவதால் இந்த தேநீர் விருந்துகளை  திமுக கூட்டணி புறக்கணிப்பது வாடிக்கையாக உள்ளது.  கடந்த ஆண்டு கூட முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் அளித்த சுதந்திர தின விழா தேநீர் விருந்தைப் புறக்கணித்தார். இதுதொடர்பாக அப்போது அவர் விடுத்த அறிக்கையில், நாட்டின் 77-வது விடுதலை நாளைக் கொண்டாடும் நேரத்தில், சில நாட்களுக்கு முன் சென்னையை சேர்ந்த 17 வயது மாணவர் ஜெகதீஸ்வரன் அவரது தந்தை செல்வசேகர் இருவரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி, முன்னோர் இன்னுயிர் ஈந்து நமக்களித்த விடுதலை, எல்லோருக்குமானதா, வசதி படைத்த வெகு சிலருக்கானதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.




அரியலூர் அனிதா தொடங்கி இதுவரை பல மாணவர்களின் உயிர்களை நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் இழந்துள்ளோம். இவர்களின் மரணங்கள் எழுப்பும் தார்மீகக் கேள்விகள், நமது மனச்சாட்சியை உலுக்கி வருகிறது.


ஆளுநர், அரசியல் ரீதியாக திராவிடம், ஆரியம், திமுக, திருவள்ளுவர், வள்ளலார், சனாதனம் பற்றிப் பேசி வருவதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. அது கபட வேடம் என்பதை அறிந்தே இருக்கிறோம்; ஆரியப் புலம்பலாக ஒதுக்கித் தள்ளுகிறோம். ஆனால், ஏழை எளிய, விளிம்பு நிலை அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை அப்படித்தான் சிதைப்பேன் என்று நியமனப் பதவியில் இருக்கும் ஓர் ஆளுநர் கொக்கரிப்பார் என்றால், இது கல்வித்துறை மீது நடத்தப்படும் சதியாகவே கருதுகிறோம்.


தமிழக மாணவர்களின் எதிர்காலம் எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் மக்களுக்காக  என்றென்றும் உரிமைக் குரலை எழுப்பும் ஒரே கட்சி திமுகதான். பல்கலைக் கழகங்களைச் சிதைத்தும், உயர் கல்வித் துறையைக் குழப்பியும், தமிழக சட்டப்பேரவையில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி தராமலும், தமிழக மாணவர்களை, பெற்றோரை அவர்கள் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநரை கண்டிக்கிறேன்.


இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15 அன்று, ஆளுநர் மாளிகையில், அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்திருந்தார். அதேசமயம், அந்த ஆண்டு குடியரசு தின விழாவின்போது ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அமைச்சர்களோடு கலந்து கொண்டிருந்தார்.


இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வரும், அமைச்சர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களிடம்போது தெரிவித்தார்.  திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் முதல்வர் பங்கேற்பது ஏன் என்று செய்தியாள்ரகள் அப்போது கேட்டனர்.


அதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசியல் நிலைப்பாடு வேறு, அரசு நிலைப்பாடு வேறு. ஆளுநர் என்பது ஒரு அமைப்பு. அதற்குரிய அரசியல் சாசன மரியாதையை எப்போதும் முதல்வர் கொடுத்து வந்திருக்கிறார். அந்த அடிப்படையில் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்கிறார் என்று விளக்கினார்.


திமுக கூட்டணி புறக்கணிப்பு - அதிமுக - பாஜக பங்கேற்பு



திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தேநீர் விருந்தைப் புறக்கணித்துள்ள நிலையில், கடந்த ஆண்டு ஆளுநரை குற்றம் சாட்டி தேநீர் விருந்தைப் புறக்கணித்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய தேநீர் விருந்தில் கலந்து கொள்வது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அரசு சார்பிலேயே இந்த பங்கேற்பு என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.


இன்றைய தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்