சென்னை: தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக 17 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த முதல்வர் மு. க.ஸ்டாலின் சென்னைக்கு புறப்பட்டார்.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா சென்றார் மு.க.ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 29ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ விமான நிலையம் வந்த முதல்வருக்கு அமெரிக்காவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை அடுத்து அங்கு நடைபெற்ற முதலீட்டர்கள் மாநாட்டில் பங்கு பெற்று பல முன்னணி தொழில் நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து ரூபாய் 900 கோடி புத்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் மூலம் சென்னை, மதுரை, கோவை, செங்கல்பட்டு, உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 4,100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.
இதனை முடித்துவிட்டு சிகாகோ சென்ற முதல்வர் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசினார். ஆர்.ஜி.பி.எல்.ஐ நிறுவனத்துடன் 100 கோடி ரூபாய் முதலீடுக்கான புத்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவில் 17 நாட்கள் தங்கியிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 18 நிறுவனங்களுடன் மொத்தம் ரூபாய் 7,616 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட மகிழ்ச்சியுடன் சிகாகோ விமான நிலையத்திலிருந்து சென்னை புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து அவர் தனது எக்ஸ் தளத்தில் Good bye USA என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
180 தாண்டுனாலே நாக்கு தள்ளும்.. இதுல 220 எடுத்தாகணும்.. என்ன செய்யப் போகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்?
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!
ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!
Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!
ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்
ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!