சென்னை: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இப்போது வேற லெவலுக்கு மாறி விட்டது. ஹாலிவுட் சூப்பர் நடிகர் - இயக்குநர் கிளின்ட் ஈஸ்ட்வுட்டே இந்தப் படத்தைப் பார்க்கப் போவதாக டிவீட் போட்டுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டாவின் முதல் பார்ட் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படத்தின் நாயகன் பாபி சிம்ஹா, பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இந்த ரோலில் நடிக்க எனக்கே ஆசையாக இருக்கிறது என்று ரஜினிகாந்த்தே பாராட்டிய கதை இது.
அப்படிப்பட்ட படத்தைக் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் இப்போது எடுத்த படம்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இதில் எஸ்.ஜே. சூர்யா, ராகவா லாரண்ஸ் ஆகியோர் அதிரடியாக நடித்திருந்தனர். இப்படமும் மிகப் பெரிய ஹிட்டானது. வரலாறு காணதா வசூலையும் படைத்தது. இப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி அங்கும் பட்டையைக் கிளப்பியது.
இந்த நிலையில் இப்படத்தைப் பற்றி விஜய் என்ற ஒரு ரசிகர் டிவீட் போட்டிருந்தார். அதை ஹாலிவுட் ஸ்டார் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டுக்கு டேக் செய்திருந்தார். அதில், ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் என்ற பெயரில் ஒரு தமிழ்ப் படத்தை இந்தியர்களாகிய நாங்கள் தயாரித்துள்ளோம். இது நெட்பிளிக்ஸில் இருக்கிறது. இந்தப் படத்தில் உங்களுக்கு மிகப் பெரிய கிரெடிட் கொடுத்துள்ளார்கள். உங்களது இளம் வயது தோற்றத்தில் சில காட்சிகளை அனிமேட் செய்துள்ளனர். தயவு செய்து நேரம் கிடைத்தால் பாருங்கள் என்று கூறியிருந்தார்.
கூறி விட்டு அவர் பாட்டுக்கு அடுத்த வேலையைப் பார்க்கப்போய் விட்டார். கிளின்ட்ஈஸ்ட்வுட் எவ்வளவு பெரிய தல.. அவரெல்லாம் இந்த டிவீட்டைப் பார்ப்பாரா, பதிலளிப்பாரா என்றுதான் விஜய் நினைத்திருப்பார். ஆனால் என்ன ஆச்சரியம்.. கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் அதிகாரப்பூர்வ டிவிட்ர் ஹேன்டிலிலிருந்து விஜய்க்கு பதில் வந்துள்ளது.
அதில், ஹாய்.. கிளின்ட்டுக்கு இந்தப் படம் குறித்துத் தெரிய வந்தது. தனது புதிய படம் ஜூரர் 2 படத்தை முடித்து விட்டு வந்து பார்ப்பதாக சொல்லியுள்ளார் நன்றி என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதைப் பார்த்து விஜய் மட்டுமல்ல.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டீமே மகிழ்ச்சியில் பதறிப் போய்க் கிடக்கிறது.
எஸ்.ஜே.சூர்யா ஓடி வந்து சார்ர்ர்ர்ர்ர்ர் ரொம்ப நன்றி சார்.. உங்க வரைக்கும் இந்தப் படம் ரீச் ஆனது மகிழ்ச்சியா இருக்கு சார்.. நானும், ராகவா லாரண்ஸும் உங்க விசிறிகள் சார்.. உங்களோட மிகப் பெரிய ரசிகர்கள்.. எங்க இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உங்களோட மிகப் பெரிய வெறியர் சார் என்று கூறி நெகிழ்ச்சி அடைந்துள்ளார். மொத்த தமிழ்த் திரையுலகமும் இந்த டிவீட்டைக் கொண்டாடி வருகிறது.
நிஜமாவே வேற லெவல் கொண்டாட்டம்தான்.. நம்மவர்களுக்கு!
தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!
ஸ்ரீ ராம நவமி.. ராம பிரானின் அவதார தினம்.. நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே!
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}