நெல்லை: அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் அடுத்தடுத்து கலாட்டாக்கள் அரங்கேறுவதால் கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளதாம். கும்பகோணம் கூட்டத்தில் ஒரு கலாட்டா நடந்த நிலையில் இன்று நெல்லையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது பெரும் கை கலப்பே அரங்கேறி அதிர வைத்துள்ளது.
நெல்லையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி முன்னிலையில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டத்தில் இருதரப்பு நிர்வாகிகளுக்கு இடையே பெரும் கலாட்டா ஏற்பட்டு விட்டது. இதே போல கும்பகோணத்திலும் அதிமுக கள ஆய்வில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கள ஆய்வுக் குழுவை நியமித்திருந்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. 10 முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய இந்த குழுவினர் மாவட்டம் தோறும் சென்று கட்சிப் பணிகள் தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கூட்டத்தில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளும் கலந்து வருகின்றனர்.
இந்தநிலையில்,இன்று நெல்லை மற்றும் கும்பகோணத்தில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கடையே மோதல் ஏற்பட்டது. நெல்லையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் பாப்புலர் முத்தையாவுடன் மாவட்ட செயலாளர் கணேச ராஜா தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் வாக்கு வாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதனை பார்த்த எஸ்பி வேலுமணி மற்றும் மூத்த கட்சி நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.
கும்பகோணத்தில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச முற்பட்ட போது, அவரை இடைமறித்து நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மேடையில் இருந்தவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியது. அதன்பின்னர் அவர்களை சமாதானம் செய்தார் திண்டுக்கல் சீனிவாசன். இதனால், அதிமுக கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்து கட்சி கூட்டங்களில் நடைபெறும் கலாட்டாக்களால் கட்சித் தலைமை அதிருப்தி அடைந்துள்ளதாம். மேலும் கூட்டணிக் கட்சிகள் கூட்டணிக்கு வர கோடிக்கணக்கில் பணம் கேட்கின்றன. அதிமுகவினர் தேர்தல் பணிகளைச் செய்ய காசு கேட்கிறார்கள். கொடுக்காவிட்டால் வேலை செய்வதில்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசும் பேச்சுக்களையும் கூட கட்சித் தலைமை விரும்பவில்லை என்று சொல்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}