டெல்லி: தவறுதலாக விமானத்தின் அவசர கால கதவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்து விட்டார். இதற்காக மன்னிப்பு கேட்டு கடிதமும் கொடுத்து விட்டார் என்று கூறியுள்ளார் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா.
டிசம்பர் 10ம் தேதி சென்னையிலிருந்து திருச்சி சென்ற இன்டிகோ விமானத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா பயணம் செய்தார். விமானம் கிளம்புவதற்கு ஆயத்தமாகி வந்த நிலையில், விமானத்தின் அவசர காலக் கதவை அவர் திறந்து விட்டார். இதை அங்கிருந்த சக பயணிகள் பார்த்துள்ளனர்.
ஆனால் இந்த விவகாரம் வெளியில் வரவில்லை. யாரும் இதைப் பற்றி சொல்லவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதுகுறித்து ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தேஜஸ்வியின் பெயரைக் குறிப்பிடாமல் அவசர கால கதவைத் திறந்து விளையாடியவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது அப்படியே விடப்பட்டு விட்டது.
சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணி மீது ஒரு தொழிலதிபர் சிறுநீர் கழித்த விவகாரம் பெரிதாகி அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், தேஜஸ்வி விவகாரத்தை ஆங்கில ஊடகங்கள் சில பெரிய அளவில் செய்தியாக்கின. இதனால் தேசிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதுகுறித்து விசாரணைக்கு விமான நிலைய ஆணையரகம் உத்தரவிட்டது. ஆனால் இன்டிகோ நிறுவனம், தெரியாமல் கை பட்டு, கதவைத் திறந்து விட்டார் தேஜஸ்வி. மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் விவகாரம் அத்துடன் முடிக்கப்பட்டு விட்டதாக விளக்கம் அளித்தது.
இப்படி விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா விளக்கம் அளிக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து சிந்தியா விளக்குகையில், மிகுந்த கவனத்துடன் இது அணுகப்பட வேண்டும். இதை சிக்கலாக்க முயற்சிக்கக் கூடாது. தெரியாமல், தவறுதலாக கதவு திறக்கப்பட்டு விட்டது. அதுகுறித்து அவரே விமான ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து முறையாக அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்ட பின்னரே விமானம் கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார் என்றார் சிந்தியா.
ஆனால் இந்த விவகாரத்தை சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் விவாதித்து வருகின்றன. மிகப் பெரிய அச்சுறுத்தல் தரக் கூடிய செயலை தேஜஸ்வி செய்துள்ளார். அவரை சர்வ சாதாரணாக மன்னிப்புடன் விடுவதா.. இதையே சாதாரணமானவர்கள் செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமா இல்லையா என்று அவர்கள் கேட்கிறார்கள்.
இன்டிகோ நிறுவனத்தால் இந்த விவகாரம் வெளியில் வராமல் மறைக்கப்பட்ட நிலையில் தற்போது இது வெடிகுண்டு போல வெடித்த நாடு முழுவதும் பெரும் விவாதங்களையும் சலசலப்புகளையும் ஏற்படுத்தி விட்டது.
நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!
CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!
A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு
பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!
இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!
IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?
அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}