சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் மூலமாக மக்களை பிளவுப்படத்துவதையோ, பிரிவினையை ஏற்படுத்துவதையோ தேமுதிக என்றைக்கும் ஏற்காது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
மக்களுக்கு சம உரிமையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். இச்சட்டத்தின் தன்மை மற்றும் வழிமுறைகளையும், அது மக்களுக்கு பாதுகாப்பாக இருக்குமா என வெளிப்படையாக மத்திய அரசு வெள்ளை அறிக்கையாக தர வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: மதத்தால், மொழியால், ஜாதியால், உணர்வால் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக ஒற்றுமையாக இணைந்து, உலகிலேயே கலாச்சாரம் நிறைந்த நாடாக மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழும், நமது இந்திய நாட்டின் குடியுரிமைச் சட்டம் என்கிற சட்டத்தின் மூலம் மக்களை பிளவுபடுத்துவதையோ, பிரிவினை ஏற்படுத்துவதையோ, தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்றைக்கும் ஏற்காது.
இங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவது மிக மிக முக்கியமான ஒன்று. எனவே இந்தச் சட்டத்தின் முழு விவரத்தையும் அனைத்து மக்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் இந்த சட்டம் நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும் என்கின்ற உத்திரவாதத்தை மத்திய அரசு கொடுக்க வேண்டும்.
தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் அனைத்து மக்களிடையே இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் உள்ள தன்மை மற்றும் வழிமுறைகளை எப்படிப்பட்ட சட்டங்களை அறிவிக்க போகிறார்கள் என்றும், அதை எப்போது அமல்படுத்தப் போகிறார்கள் என்றும், இந்த சட்டம் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்குமா? என்றும் வெளிப்படையாக வெள்ளை அறிக்கையாக மத்திய அரசு விளக்கம் தர வேண்டும். அப்போது தான் இந்த சட்டம் ஏற்புடையதா? இல்லையா? என்று தெரிந்து கொள்ள முடியும். இதுவரை இந்த சட்டத்தை தேமுதிக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று கூறியுள்ளார்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}