கலிபோர்னியா: "எங்க முதலாளி நல்ல முதலாளி" என்று ஊழியர்களே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு காட்சியை நல்லவனுக்கு நல்லவன் படத்தில் பார்த்திருக்கிறோம்.. ஆனால் நிஜத்தில் யாராச்சும் இருப்பாங்களா?
அப்படியும் ஒருத்தர் இருக்காரய்யா இருக்காரு. அவர் தான் அமெரிக்காவை சேர்ந்த பிரபல சிட்டாடல் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி கென் க்ரிஃபின். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, கென் கிரிஃபினின் சொத்து மதிப்பு சுமார் 35.4 பில்லியன் டாலர் ஆகும். இவர் செய்தது என்ன தெரியுமா? சொன்னா வாயடைத்து போவிங்க... முதலாளினா எப்படி இருப்பாங்க. தன்னிடம் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு போனஸ் கொடுப்பாங்க அப்படி இல்லைனா ஒரு கிப்ட் கொடுப்பாங்க. இது தான் நமக்கு தெரிந்த முதலாளி.
ஆனா கிரிபின் வேற லெவலில் பணியாளர்களை குஷியாக்கியுள்ளார். என்ன ஒரே புகழாரமா இருக்கு மேட்டருக்கு வாங்கனு நீங்க செல்றது எனக்கு கேட்குது. இருங்க இருங்க வர்றேன். கிரிபின், தன்னிடம் பணிசெய்யும் பணியாளர்களுக்கு டோக்கியோவில் உள்ள டிஸ்னிலேண்டிற்கு சென்று வர அவரது செலவில் டூர் ஏற்பாடு செய்துள்ளார். 1,2 பேர் இல்லைங்க தன்னிடம் பணியாற்றும் 1,200 ஊழியர்களுக்கும் டூர் ஏற்பாடு செய்துள்ளார் இவர். தனது நிறுவனத்தின் 3ம் ஆண்டு கொண்டாட்டத்திற்காக தான் இந்த ஏற்பாடாம். அதுவும் ஆபிஸ்சில் பணி செய்பவர்கள் மட்டும் இல்லங்க, அவங்க அவங்க குடும்பத்துடன் டூராம் பாத்துக்கோங்க.
இப்ப செல்லுங்க இவரைப் புகழ்ந்தது சரிதானே.. ஹாங்காங், சிங்கப்பூர், சிட்னி, ஷாங்காய், டோக்கியோ மற்றும் இந்தியாவின் குருகிராம் ஆகிய ஆறு அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள் வந்திருந்தனர். இவர்கள் டோக்கியோவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்டில் குடும்பத்தினருடன் மூன்று நாட்கள் தங்கள் நேரத்தை செலவிடலாம். அக்டோபர் 27,28,29 ஆகிய 3 நாட்கள் இக்கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.
1200 பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கான பயணம், ஹோட்டல்கள், உணவு, டிஸ்னி டிக்கெட்டுகள், பொழுதுபோக்கு மற்றும் குழந்தை பராமரிப்புக்கான அனைத்து செலவுகளையும் அந்த முதலாளியே ஏற்றுக்கொண்டுள்ளார். அதுமட்டுமில்லங்க முக்கியமான ஒன்னு இருக்கு, அது என்னன்னா டிஸ்னியில் தனது ஊழியர்கள் யாரும் வரிசையில் நிற்கக்கூடாதுனு VIP பாஸ் வாங்கி கொடுத்திருக்கிறார்.
அய்யாவே.. ராசாவே.. அப்படியே தமிழ்நாட்டிலேயும் நாலஞ்சு பிராஞ்ச்சை ஓபன் பண்ணி விடுங்க.. எங்காளுகளும் ஜாலியா இருப்பாங்க..!
Budget 2025: 100 புதிய விமான நிலையங்கள்.. ஹீல் இந்தியா திட்டம்.. முக்கிய அறிவிப்புகள்
Budget 2025: எதிர்க்கட்சிகளின் கடும் அமளி, வெளிநடப்புக்கு இடையே தாக்கலானது மத்திய பட்ஜெட்
சீட் கிடைக்காத கோபம்.. 8 எம்எல்ஏ.க்கள் ராஜினாமா.. தேர்தல் நேரத்தில் ஆம்ஆத்மிக்கு புதிய தலைவலி
பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ரெடி... புயலை கிளப்ப எதிர்க்கட்சிகளும் தயார்... இன்று என்ன நடக்கும் ?
Budget 2025: பட்ஜெட் நாளில் ரூ.7 குறைக்கப்பட்ட கமர்ஷியல் சிலிண்டர் விலை
மத்திய பட்ஜெட் 2025: 8வது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
மத்திய பட்ஜெட் 2025 : எந்த பொருட்களின் விலை குறைய-உயர வாய்ப்பு.. சர்பிரைஸ் தருவாரா அமைச்சர் நிர்மலா?
சட்டம்ஒழுங்கு சிறப்பாக உள்ளது.. அதனால்தான் வெளிநாட்டு நிறுவனங்கள் வருகின்றன.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}