முகத்தை வட்டமிட்ட பூச்சி.. விருட்டென்று கடித்ததில்.. கண் பார்வையைப் பறி கொடுத்த இளைஞர்!

Jul 27, 2024,01:41 PM IST

பெய்ஜிங்:   தனது முகத்தை வட்டமிட்டு தொந்தரவு செய்த பூச்சி கடித்து, பார்வையை இழந்துள்ளார் சீனாவை சேர்ந்த வூ என்ற இளைஞர்.


மனித உடல் உறுப்புகளில் முக்கியமானது கண். நாம் கண்டு ரசிப்பதற்காக அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண். நமது கண் ஒரு நிழல்படக் கருவியைப் போன்று இயங்குகிறது. கண்ணின் உதவியுடன் தான் உலகில் உள்ள அனைத்தையும் நாம் பார்த்து ரசிக்க முடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கண் ஒரு பூச்சியால் பாதிப்பு ஏற்பட்டால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? அதை யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியாது.




ஏற்கனவே ஈ படத்தால் நம்ம சுதீப் பட்ட கஷ்டத்தை யாரும் மறந்திருக்க முடியாது. கிட்டத்தட்ட அதேபோல ஒரு கஷ்டத்தை சீனாவைச் சேர்ந்த ஒருவர் சந்தித்து உச்சகட்டமாக கண் பார்வையையும் இழந்துள்ளார். நாமக்கெல்லாம் கொசு கடித்தால் என்ன செய்வோம். அது கடித்த இடத்திலேலே வைத்து அடிப்போம். அப்படி தான் சீனாவை சேர்ந்த இளைஞரும் செய்தார்.. ஆனால் கண் பார்வை போய் விட்டது..  பூச்சியை அடித்தால் எப்படி கண் பார்வை போகும் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. வாங்க பார்ப்போம்.


சீனாவை சேர்ந்த வூ என்ற இளைஞர். சம்பவத்தன்று இவரது முகத்தை ஒரு பூச்சி சுற்றிச் சுற்றி வந்துள்ளது. விரட்டிப் பார்த்தும் அது போகவில்லை. கடுப்பான அவர் ஓங்கி பலமாக பூச்சியை அடித்துள்ளார். ஆனால் அதற்குள் அந்தப் பூச்சி அவரது கண்ணில் கடித்து விட்டது. இதனால் கண்ணில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.  சாதாரண வீக்கம் என்று அவர் அசால்டாக விட்டு விட்டார். சிறிது நேரத்திலேயே இடது கண்ணில் வலி ஏற்பட்டுள்ளது. 


அதன்பின்னர் வலி அதிகரித்து கண் பார்வை குறைய ஆரம்பித்துள்ளது. பதறி அடித்து கொண்டு மருத்துவமனை சென்ற இளைஞருக்கு, மருத்துவர் கண் பரிசோதனை செய்து பார்த்தனர். கண் பரிசோதனைக்கு பின்னர் மருத்துவர்கள் இதே நிலை தொடர்ந்தால், இது மூளையை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர். மூளை பாதிக்கக்கூடாது என்பதற்காக அவரின் கண்விழியை அறுவை சிகிச்சை செய்து எடுத்துள்ளனர் மருத்துவர்கள். இவரை கடித்த பூச்சி Drain fly என்பது கண்டறியப்பட்டுள்ளது. மனிதனுக்கு எப்படியெல்லாம் கஷ்டம் வருகிறது என்று பாருங்கள்.

சமீபத்திய செய்திகள்

news

Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!

news

Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

news

மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

2026 சட்டப்பேரவை தேர்தல்: டிசம்பருக்கு பின்னரே கூட்டணி குறித்து தவெக முடிவு?

news

Summer Jokes: மே முதல் கத்தரி வெயில்.. ம்க்கும்.. இப்ப மட்டும் வெண்டைக்காய் வெயிலா அடிக்குது...!

news

தொடர் சாதனை உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிப்பு!

news

அர்ஜென்டினாவில் ரயில்வே தொழிலாளியின் மகனாக பிறந்து.. போப்பாண்டவராக உயர்ந்த.. பிரான்சிஸ்!

news

Monday Motivation... ஹாய் பிரண்ட்ஸ்.. நீங்க காலைல கண் விழிச்சதும் முதல்ல எதைத் தேடுவீங்க?

news

கோவையில் வரும் 26,27 தவெக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம்... விஜய் பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்