உங்களுக்கு வயோதிகம் வர "இவங்க"தான் காரணம்.. சூப்பரான கண்டுபிடிப்பு.. சீனாவில்!

Nov 07, 2023,02:31 PM IST

பெய்ஜிங்: "உனக்கு வயசானாலும் உன் ஸ்டைலும், அழகும் மாறலை.. அப்படியே இருக்கு".. அப்படின்னு நீலாம்பரி பாராட்டிப் பேசும்போது படையப்பா அடையும் சந்தோஷத்தை நாம வெளியில் பார்க்க வாய்ப்பில்லைன்னாலும்.. கண்டிப்பா உள்ளுக்குள் உற்சாகமாகத்தான் இருந்திருக்கும்.


யாருக்குத்தாங்க வயசாவது பிடிக்கும்.. அப்படியே இளமையோட இருக்கணும்.. அழகா இருக்கணும்.. வயசே ஆகக் கூடாது அப்படின்னு நினைக்கிறவங்கதான் அதிகம்.  இளமை மீதான மோகம் யாருக்குத்தான் இல்லை.. எல்லோருக்கும் நிறையவே இருக்கிறது. இதனால்தான் உலகம் முழுவதும் வயதாவைத் தடுக்க முடியுமா.. அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன. 


இந்த ஆய்வுகளின் ஒரு பகுதியாக சீனாவில் ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது நமது உடலில் வயது ஆவதை  தீர்மானிக்கும் செல்களைக் கண்டுபிடித்துள்ளனர். அது எப்படி இயங்குகிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர்.  இந்த செல்கள்தான் நமது உடலின் வயோதிகத்துக்கு முக்கியக் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  இதை விட்டமின் சி சப்ளிமென்ட் கொடுத்து வீரியத்தைக் குறைத்தால் வயோதிகத்தையும் குறைக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.




நமது முதுகெலும்பு மோட்டார் நியூரான்களைச் சுற்றிலும் இது இருப்பதாகவும்,  இதுதான் வயோகிதத்தைத் தூண்டும் நடவடிக்கைகளை செய்வதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  இளமையானவர்களை விட வயதானவர்களிடம்தான் இந்த செல்கள் அதிகம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இந்த செல்கள்தான் வயோதிகத்திற்கு காரணம் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.


கடந்த 7 வருடமாக நடந்து வந்த ஆய்வில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளது. ஹாங்காங் உள்ளிட்ட 3 இடங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நமது உடலின் முக்கிய அங்கம் முதுகெலும்பு. நமது இயக்கத்திற்கும் அது மிக மிக முக்கியமானது. இப்போது முதுகெலும்பைச் சுற்றியுள்ள செல்கள்தான் நமது வயோதிகத்திற்குக் காரணம் என்ற தகவல் ஆச்சரியத்தையும், சுவாரஸ்யத்தையும் கூட்டியுள்ளது. ஆய்வுகள் தொடர்கின்றன..!

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்