சென்னை: சென்னையில் கேரட் சாப்பிடும்போது தொண்டையில் சிக்கிக் கொண்டதால், மூச்சு திணறல் ஏற்பட்டு இரண்டு வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சாப்பிடும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். வேகம் வேகமாக சாப்பிடுவது, சரியாக மெல்லாமல் சாப்பிடுவது, எல்லாவற்றையும் வாயில் போட்டு அவசரமாக சாப்பிடுவது பல நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகி விடும். சரியாக சாப்பிடாமல் தொண்டையில் சிக்கிக் கொள்வது, சிக்கி விக்கல் வருவது, சரியாக மெல்லாமல் உள்ளே தள்ளுவதால் அஜீரணப் பிரச்சினைகள் என பின்னர் அவதிப்பட நேரிடும். சிலர் தண்ணீரைக் கூட வேகமாக குடித்து புரைக்கேறி அவதிப்படுவார்கள்.
இப்படித்தான் சென்னையில் ஒரு சிறுமி கேரட்டை சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி அந்தக் குழந்தையின் உயிரே போய் விட்டது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இரண்டு வயது பெண் குழந்தை லத்திகா. இவர் நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபடியே கேரட் சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளார். அப்போது கேரட் துண்டுகள் குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்டது.
இதனால் குழந்தை மூச்சு விட முடியாமல் துடித்து மயக்கமுற்றது. பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி கொடுக்கப்பட்டு பிறகு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வழியிலேயே குழந்தை இழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்.
இதனை அறிந்த போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரட் சாப்பிட்டு தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைக்கு பல் முளைக்காத சமயத்தில் கேரட் போன்றவற்றைக் கொடுப்பது வழக்கம்தான். காரணம், அதேசமயம், இதுபோன்று கொடுக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக பற்கள் முளைத்த குழந்தைகளுக்கு கேரட்டைக் கொடுப்பது ஆபத்தானது. சரியாக மெல்லாமல் உள்ளே முழுங்கி விடுவதால் இதுபோன்ற விபரீதங்கள் ஏற்பட்டு விடுகிறது என்பதை பெற்றோர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மினி பஸ்களில்.. இனி மினிமம் டிக்கெட் ரூ. 4.. அதிகபட்சம் 10 ரூபாய்.. புதிய கட்டண விகிதம் அறிவிப்பு
வெயில் தொடங்கி விட்ட போதும்.. ஜனவரி 30 முதல் பிப்ரவரி 3 வரை.. மிதமான மழைக்கு வாய்ப்பு!
ஸ்ரீஹரிகோட்டாவில் செஞ்சுரி அடிக்கும் இஸ்ரோ.. நாளை 100வது செயற்கைக் கோளை ஏவுகிறது!
தலித் ஊழியரை பொய் வழக்கில் சிக்க வைத்ததாக.. இன்போசிஸ் இணை நிறுவனர் உள்ளிட்டோர் மீது வழக்கு
ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் அருகே.. ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி அன்பு!
தமிழக வெற்றிக் கழகத்தில்.. அடுத்தபடியாக.. பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க விஜய் உத்தரவு!
வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த ஒரே முதல்வர் யார் தெரியமா.. டாக்டர் அன்புமணி பேச்சு
சீமான் என்ன பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளரா?.. விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!
அமெரிக்கா செல்லவுள்ளார் பிரதமர் மோடி.. டிரம்ப்புடன் முக்கியப் பேச்சு.. எப்போது, எத்தனை நாட்கள்?
{{comments.comment}}