டீச்சருடன் போட்டோஷூட்.. கன்னத்தில் முத்தம்.. அலேக்காக தூக்கிய மாணவர்.. கர்நாடகாவில் பரபரப்பு!

Dec 30, 2023,05:18 PM IST

சிக்பல்லாபூர்:  கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியையும், மாணவர் ஒருவரும் சேர்ந்து எடுத்த ரொமான்டிக் போட்டோஷூட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள முருகமல்லா அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியைதான் இந்த காதல் ரொமான்டிக் போட்டோஷூட்டை நடத்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


அந்த போட்டோவில் தலைமை ஆசிரியையும் மாணவனும் கட்டிப் பிடித்தபடியும், சேலையைப் பிடித்து இழுப்பது, ரோஜாப் பூ கொடுப்பது போலவும், டீச்சரை மாணவன் தூக்கி  பிடிப்பது போலவும், இருவரும் மாறி மாறி கன்னத்தில் முத்தமிடுவது என்று கல்யாண போட்டோஷூட்களில் செய்வது போல ரொம்ப இன்டிமேட்டாக செய்துள்ளனர். இந்த புகைப்படங்களை எப்பொழுது எடுத்துள்ளார்கள் தெரியுமா? கல்வி சுற்றுலா பயணத்தின் போது இந்த போட்டோக்களை எடுத்துள்ளனர்.




இந்த போட்டோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. புகைப்படங்களை இணையத்தில் பார்த்த பெற்றோர்கள் ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தற்போது அந்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை கூறுகையில், அம்மா மகன் உறவு போலத்தான் இது. இதில் எந்தத் தவறும் இல்லை. நாங்கள் எங்களுக்குள் வைத்துக் கொள்வதற்காக எடுத்துக் கொண்ட படம் இது. ஆனால் எப்படி லீக் ஆனது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.


ஆனால், ஆசிரியை, மாணவனிடம் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார், அவனது பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் நடந்து கொண்டுள்ளார் எனவே அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். காரணம், இந்த பயணத்தின்போது சம்பந்தப்பட்ட மாணவனிடம் மிகவும் நெருக்கமாக இருந்தாராம் இந்த தலைமை ஆசிரியை.


சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோரும், சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். ஆசிரியையின் முழுமையான நடவடிக்கை குறித்தும் முழுமையாக விசாரிக்கவும் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். 


இந்த சம்பவம் இணையத்தில் கண்டனத்திற்குரியதாகி வருகிறது. கல்வி பயணத்தின் போது இத்தகைய சம்பவம் நடந்திருப்பதால் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஆசிரியையே இவ்வாறு நடந்து கொண்டால் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து கவலை எழுந்துள்ளதாக பெற்றோர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


ஆசிரியர்- மாணவர் உறவு என்பது உன்னதமானது. ஒரு மாணவனின் வாழ்க்கை பாடம் பள்ளிகளில் இருந்து தான் ஆரம்பிக்கின்றன. ஆசிரியை குருவாக கருதப்படும் இடத்தில் வைப்பதற்கு காரணம் மாணவர்களின் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் ஆசிரியரின் பங்கு ஆளப்பரியதாக இருப்பதால் தான். முன்பெல்லாம் ஆசிரியரை பார்த்தால் பயம், பக்தி இரண்டும் இருந்தது. தற்பொழுது அது மாறிவிட்டது. ஆசிரியர்களை பார்த்தாலே பயந்து நடுங்கிய காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. இந்த சூழலில், மாணவனுடன் ஆசிரியை இப்படி ரொமான்டிக்கான போட்டோஷூட் நடத்தியிருப்பது அதிர வைப்பதாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்