இனி எல்லா தேர்தலிலும் திமுகவே வெற்றி பெறும்.. மத்தியில் ஆட்சி மாறும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Mar 13, 2024,05:50 PM IST
பொள்ளாச்சி: இனிவரும் எல்லா தேர்தல்களிலும் திமுக தான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாகவும், மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும்  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். மேலும், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 509 கோடி ரூபாய் மதிப்பிலான நிறைவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, 416 கோடி ரூபாய் செலவிலான புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது: 



தேர்தல் களத்தில் கொடுத்த வாக்குறுதிகளை பலவற்றை நிறைவேற்றி மன நிறைவோடு, தெம்போடு உங்களை சந்திக்க வந்து இருக்கிறேன். சிறப்பான 3 ஆண்டு கால ஆட்சியை வழங்கிய பெருமிதத்துடன் உங்களை சந்திக்கிறேன்.நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல. அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் திமுக தான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. 

கோவை, ஈரோடு, திருப்பூர்,நீலகிரியில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றி இருக்கிறோம்.  கலைஞர் மகளிர் உரிமை திட்டம், விடியல் பயணம், புதுமைப்பெண், இல்லம் தேடி கல்வி ,காலை உணவு, நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம், கள ஆய்வில் முதல்வர்,  மக்களுடன் முதல்வர், நீங்கள் நலமா உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம், கோட்டையில் இருந்து திட்டத்தை அறிவிக்கும் முதலமைச்சர் ஆக மட்டுமல்லாமல் களத்தில் நேராக சென்று ஆய்வு செய்கிறேன். 

மக்களுக்கான முத்திரை திட்டங்களை உருவாக்குவதில் தான் தமிழ்நாட்டின் தொழில் வளம் பெருகுகிறது. 
தமிழகத்தின் வேலைவாய்ப்பு பெருகி பொருளாதாரம் உயர்கிறது. இதனை கண்டு சிலர் பொறாமை அடைந்து பொய்களை பரப்ப வாட்ஸ் அப் யூனிவர் சிட்டி நடத்துகிறார்கள். அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு தடுப்பதாக பிரதமர் மோடி பொய் சொல்கிறார்.  எல்லா திட்டத்துக்கும் மாநில அரசு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று சொல்கிறார். 

தேர்தலுக்கு முன்னதாக பொய் சொன்னால் ஏமாற நாங்கள் ஏமாளிகளா என தெரியவில்லை. சிந்தித்து செயல்படுவதால் பொருளாதாரம் வளர்கிறது. ஈரோடு மாவட்டத்தில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திருப்பூர் பாதாள சாக்கடை திட்டம் இணைப்பு 800 கிலோமீட்டர் சாலைகள், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கின்றன. தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. வனவிலங்கு தாக்கி உயிர்  இழப்போருக்கு  இழப்பீடாக ரூபாய் 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

எய்ம்ஸ் கொண்டு வருவதாக சொன்னார்கள். மறைந்த அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது ஜெயலலிதா அதை தடுத்தார்களா? இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏதேனும் திட்டங்களை கொண்டு வரவிடாமல் தடுத்துவோமா? இல்லை. மக்கள் ஏதேனும் திட்டம் வேண்டாம் என தடுத்தார்களா?  இல்லை. 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பாஜக கொடுத்த வாக்குறுதி. அதிமுக ஆட்சியில் நிறைவேறப்பட்ட திட்டங்களை பட்டியலிட முடியுமா? கூட்டணியாக இருந்த அதிமுகவும் பாஜகவும் பிரிந்தது போல் நடிக்கிறது. மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் தமிழகத்திற்கு கூடுதலாக நலத்திட்டங்கள் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு

news

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?

news

தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை

news

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!

news

நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!

news

நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!

news

இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!

news

மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!

news

உலகமே எதிர்பார்க்கும் அஜித்தின் குட் பேட் அக்லி நாளை வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்