அமெரிக்க பயணத்தில் அதிரடி.. ஒரே நாளில் ரூ. 900 கோடி முதலீடுகள்.. முதல்வர் மு.க. ஸ்டாலின்

Aug 30, 2024,06:26 PM IST

சென்னை: அமெரிக்காவில் ஒரே நாளில் ரூ.900 கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் சென்னை, மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களில் 4,100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.


தமிழ்நாட்டை பொருளாதாரத்தில் உயர்த்த மாநிலமாக உயர்த்த வேண்டும் என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக  அமெரிக்கா சென்றுள்ளார்.  அமெரிக்காவில் 19  நாட்கள் தங்கி பணிகளை முடித்துக்கொண்டு செப்டம்பர் 14ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். 




இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள முதல்வர்  முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்தும் பேசத் தொடங்கியுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பல்வேறு முதலீட்டாளர்களை முதலமைச்சர் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ரூ. 900 கோடி முதலீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது.


இந்த ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்காவின் அப்லைடு செட்டீரியல்ஸ் நிறுவனம் சென்னை தரமணியில் செமிகண்டக்டர் உற்பத்தி மையத்தை அமைக்கிறது. அதே போல கோவை சூலூரில் செமி கண்டக்டர் உபகரண ஆலையை ஈல்டு என்ஜினியரிங் நிறுவனம் அமைக்கிறது. ரூ.150 கோடியில் அமைகிறது இந்த ஆலை.


இது தவிர மதுரை வடபழஞ்சி எல்காட் தொழிற்பேட்டையில் இன்பின்க்ஸ் நிறுவனத்தின் மையம் ரூ.50 கோடியில் அமைகிறது.  


ஒட்டுமொத்த முதலீகள் மூலமாக மதுரை, சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் உள்ள 4,100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்