இது எங்கண்ணன் கொடுத்த சீர்.. பெருமிதத்துடன் சொல்கிறார்கள் பெண்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

Mar 11, 2024,06:13 PM IST

தருமபுரி:  பொருளாதார அதிகாரம் உள்ளவர்களாக பெண்களை மாற்றி இருக்கிறோம். மகளிருக்கு உரிமை தொகை வழங்குவோம் என்று சொன்ன தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். உரிமை தொகையைப் பெற்ற பெண்கள் இது ஸ்டாலின் அண்ணன் கொடுத்த சீர் எனக் கூறுகின்றனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் பேசியுள்ளார்.


தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் முடிவுற்ற 993 திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 8736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் தருமபரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ரூ.560 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். 


இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:




தர்மபுரி கிருஷ்ணகிரி சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான முத்தான விழா இது. தமிழ்நாட்டின் மகளிர் முன்னேற்றத்திற்கு தர்மபுரிக்கு முக்கியத்துவம் உண்டு. மகளிருக்கு உரிமை தொகை வழங்குவோம் என்று சொன்ன தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். உரிமை தொகையைப் பெற்ற பெண்கள் இது ஸ்டாலின் அண்ணன் கொடுத்த சீர் எனக் கூறுகின்றனர். 


திராவிடம் மாடல் அரசு நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட வேண்டும் என்றால் நாள் முழுவதும் பேச வேண்டும். மகளிர் சுய உதவி குழு என்று அமைப்பை தருமபுரியில் தான் கலைஞர் தொடங்கி வைத்தார். பெண் இனத்திற்கும் இளைஞர் வழங்கிய மாபெரும் அதிகாரக் கொடை தான் மகளிர்க்கு சொத்துரிமை. பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்ற சட்டத்தை இயற்றியவர் கலைஞர். பொருளாதார அதிகாரம் உள்ளவர்களாக பெண்களை மாற்றி இருக்கிறோம்.


மகளிர் உரிமை திட்டம் மூலம் 1.15 கோடி பெண்கள் பயன் பெறுகின்றனர். திட்டத்தின் பயன்கள் முறையாக சென்று சேர்கிறதா என்பதை அறிய நீங்கள் நலமா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பார்த்து பார்த்து திட்டம் தீட்டி வருகிறோம். பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவால் இதுபோன்ற திட்டங்களை பட்டியலிட முடியுமா? 24.86 லட்சம் மாணவர்கள் இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் பயன்பெறுகின்றனர். 


மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் ஒரு கோடி பேர் பயன் பெறுகின்றனர். இரண்டு ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டம் மூலம் 28 லட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றுள்ளனர். ஒகேனக்கல் திட்டத்தை முடக்கியதே அதிமுக ஆட்சியின் சாதனை. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் 16 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். 


தேன்கனிக்கோட்டை பகுதியில் யானை தாக்குதலில் இருந்து பாதுகாக்க ரூ.10 கோடியில் எஃகு வேலி அமைக்கப்படும். சேலத்தில் 164 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு சாலை திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும். மத்திய அரசு 10 ஆண்டுகளில் சிலிண்டர் விலையை ரூ. 500 வரை உயர்த்தி விட்டு தற்போது ரூ. 100 மட்டும் ஒன்றிய அரசு குறைத்துள்ளது. மாநில அரசுகளுடன் பணம் வாங்கி திட்டங்களுக்கு தனது ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்கிறார் பிரதமர் மோடி. 


மத்திய அரசு சுற்றுப்பயணத்தை  வெற்று பயணமாக  தான் தமிழக மக்கள் பார்க்கிறார்கள். ரூ. 4 கோடியில் தர்மபுரி மாவட்டத்தில் 5 சமுதாய நலக்கூடங்கள் அமைக்கப்படும். வெண்ணாம்பட்டி-தர்மபுரி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் பாரதிபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் நடமாடும் மருத்துவப் பிரிவு ஏற்படுத்தப்படும். வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றார் முதல்வர் ஸ்டாலின்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்