கல்வராயன் மலைக்கு.. முதல்வர் அல்லது உதயநிதி ஸ்டாலின் நேரில் செல்லலாமே.. ஹைகோர்ட் ஆலோசனை!

Jul 24, 2024,07:18 PM IST

சென்னை:   கல்வராயன் மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி, ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து ஏற்படுத்த முதல்வர் முக ஸ்டாலின் அல்லது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரில் ஒருவர், துறை அமைச்சருடன் சென்று பார்வையிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கல்வராயன் மலைப்பகுதியில்தான் பெருமளவில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. எந்த ஆட்சி அமைந்தாலும் இதைத் தடுக்க முடிவதில்லை. தற்போது கள்ளச் சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  கல்வராயன் மலையில் போலீஸார் தொடர்ந்து சோதனை நடத்தி பல ஊறல்களைக் கண்டுபிடித்து அழித்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




கல்வராயன் மலைப்பகுதி கிராமங்கள் இன்று வரை அடிப்படை வசதிகள் இன்றி முன்னேறாமல் உள்ளது. இதனால்தான் இந்த அவல நிலை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கல்வராயன் மலையில் வசித்து வரும் மக்களின் மேம்பாடு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கானது கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் சில யோசனைகளைத் தெரிவித்தனர்.


நீதிபதிகள் கூறுகையில், கல்வராயன் மலைப்பகுதிக்கு சென்று மக்கள் நிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அமைச்சர் உதயநிதி சென்று பார்டையிட வேண்டும். நாங்கள் சென்று பார்வையிடுவதை விட அமைச்சர்கள் சென்றால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். கல்வராயன் மலைப்பகுதியில் சாலை வசதி, ரேஷன் கடைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். 


மேலும், கல்வராயன் மலைப்பகுதி மக்களின் நிலை குறித்து, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, வழக்கு மீதான விசாரணையை  ஜூலை 26ம் தேதிக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்