நிவாரண நிதி கோருவது எங்கள் கடமை.. தர வேண்டியது அவர்களது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Dec 02, 2024,08:51 PM IST

விழுப்புரம்: புயல் மழை பாதிப்புகளை கணக்கிட்டு மத்திய அரசிடம் நிவாரண நிதி கோருவது எங்கள் கடமை. நிதி தருவது அவர்களின் கடமை. ஆனால் ஒவொரு முறையும் அதை செய்ய மறுக்கிறார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த மாதம் 30ம் தேதி மாலை கரையை கடக்கத் துவங்கி இரவு கரையை கடந்தது. புயல் கரையை கடந்த அன்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. தமிழகத்திலேயே அதிகப்படியாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ அளவிற்கு கனமழை பெய்து விழுப்புரத்தை ஒரு வழி செய்து விட்டது. மயிலம், கூட்டேரிப்பட்டு,ரெட்டணை,பெரமண்டூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் தத்தளித்தன. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.


இந்நிலையில், அங்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை பாதிப்பு மற்றும் நிவாரணப்பணிகளை ஆய்வு செய்தார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கு பொது மக்களிடம்  குறைகளைக் கேட்டறிந்தார். அதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.




இந்த ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புயல் மழை பாதிப்புகளை கணக்கிட்டு ஒன்றிய அரசிடம் நிவாரண நிதி கோருவது எங்கள் கடமை. நிச்சயமாக அனுப்புவோம். நிதி தருவது அவர்களின் கடமை. ஆனால் ஒவ்வொரு முறையும் அதை செய்ய மறுக்கிறார்கள். நம்பிக்கையோடு தான் அனுப்புகிறோம். ஒன்றிய அரசு நிதி ஒதுக்காவிட்டால் அதையும் சமாளிப்போம்.


ஃபெஞ்சல் புயல் காரணமாக சுமார் 3.18 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் சேதம் அடைந்துள்ளன. மழை நின்ற பிறது பயிர் சேதங்களை முறையாக கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும். ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அனுப்பி, விரைவில் மத்திய குழுவை அனுப்பி வைக்க கோரிக்கை வைப்போம். 


விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிக கனமழை பெய்துள்ள கிருஷ்ணகிரி, தருமபுரிக்கு துணை முதல்வர் உதயநிதியை உடனே போகச் சொல்லியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்


இதற்கிடையே, தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணமாக ரூ. 2000 கோடி நிதியை விடுவிக்க வேண்டும் என்று கூறி முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில் அவர் தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை பட்டியலிட்டுள்ளார்.


மேலும், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் CycloneFengal சூறையாடியுள்ளது. இதனால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 2.11 இலட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. 


சேதத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, #NDRF-இல் இருந்து உடனடியாக 2000 கோடி ரூபாயை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்குமாறு  பிரதமர் நரேந்திர மோடி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வங்கி கணக்கிற்கு இனி 4 பேர் வரை நாமினியாக நியமிக்கலாம் .. புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்

news

மகாராஷ்டிராவின் புதிய முதல்வராகிறார் பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ்.. டிச. 5ல் பதவியேற்பு

news

மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்.. திடீரென கைது செய்யப்பட்டது ஏன்?.. திடுக்கிடும் தகவல்கள்!

news

சாதிவாரிக் கணக்கெடுப்பு.. தேசியத் தலைவர்கள் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

TNSTCக்கு.. 5 வருடமாக எந்த நிதியுதவியும் அளிக்கவில்லை.. திமுக எம்பி கேள்விக்கு மத்திய அரசு பதில்!

news

திருக்குறளின் முப்பால்களையும் மையப்படுத்தும் படம்.. இசையமைக்க டக்கென ஒத்துக் கொண்ட இளையராஜா

news

Chennai Lakes: தொடர் மழையால் மேம்பட்ட சென்னை ஏரிகளின் நீர் இருப்பு.. சூப்பர் அப்டேட்!

news

அவசர சோறு ஆபத்து.. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.. உணவுப் பழக்கம் பழமொழி வடிவில்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 04, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்