சொல்லி விட்டு ஓய்வெடுப்பன் அல்ல நான்.. மக்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்.. முதல்வர் ஸ்டாலின்

Nov 15, 2024,03:34 PM IST

அரியலூர்: திட்டத்தை அறிவித்து விட்டோம். நிதி ஒதுக்கி விட்டோம். அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள் என ஓய்வெடுப்பவன் நான் இல்லை. மக்களின் நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுவேன்என  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


பல்வேறு மாவட்டங்களில் நேரடி கள ஆய்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். கோவையில் தொடங்கிய இந்த ஆய்வு தற்போது அரியலூர், பெரம்பலூருக்கு வந்துள்ளது. இன்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில்  பல கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். 


நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:


திட்டத்தை அறிவித்து விட்டோம். நிதி ஒதுக்கி விட்டோம். அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள் என ஓய்வெடுப்பவன் நான் இல்லை. கடந்த காலத்தில் ஒரு சிலர் அப்படித்தான் இருந்தார்கள். நாட்டில் என்ன நடக்கிறது என தெரியாமல் தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். நான் பிரச்சனைகளை எதிர்கொள்கிறேன். பிரச்சினைகளை தீர்க்கிறேன். மக்களுக்கான திட்டங்களை தீட்டுகிறேன். திட்டங்கள் எவ்வாறு செயல்படுகிறது என கள ஆய்வு செய்கிறேன். சொன்னா சொன்ன நாட்களுக்குள் திட்டங்களை திறந்து வைக்கிறேன். மக்களின் நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுவேன். அதனால் தான் இந்த ஸ்டாலின் எங்க போனாலும் மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள்.




திராவிட மாடல் அரசு மீது மக்கள் வைத்துள்ள அன்பு எடப்பாடி பழனிசாமிக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது. 4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்ததாக சிரிக்காமல் பேட்டி கொடுத்து வருகிறார் எதிர் கட்சி தலைவர் பழனிச்சாமி. அதிமுக ஆட்சியின் முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்று சொல்ல முடியுமா?. திமுக தான் தொழில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.


3 ஆண்டுகளுக்கு முன் பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும்போது பேருந்துகள் கிடைக்காமல் நெருக்கடியை சந்தித்தனர். ஆனால்  இப்போது நிலைமை மாறியுள்ளது. 


குழந்தைகள் தங்களுக்கு தேவையானவற்றை கேட்க முடியாது. அப்படி கேட்க முடியாதவர்களுக்கு அசே முன்வந்து திட்டங்களை செயல்படுத்துகிறது. காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களால் பயன் பெற்று குழந்தைகள் வளர்ந்து வருங்காலத்தில் நல்ல நிலையை அடையும் போது நானும் என் குடும்பமும் முன்னேற ஸ்டாலினும் ஒரு காரணம் என நிச்சயம் சொல்வார்கள். தமிழர்கள் மனதில் இந்த ஸ்டாலின் என்றும் நிறைந்திருப்பார். 


கடந்த 3 ஆண்டுகுளில் 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பை கொடுக்க கூடிய வகையில் 10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டுள்ளோம். நானே பல திறப்பு விழாக்களுக்கு சொன்று திறந்து வைத்து விட்டு வருகிறேன். இது தான் நல்ல ஆட்சியின் அடையாளம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

18 மாவட்டங்களுக்கு இன்று கன மழை எச்சரிக்கை.. பருவ மழை தீவிரமடைகிறது.. வானிலை மையம் தகவல்

news

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவரா நீங்கள்.. டெலிகிராம் சேனல் வந்தாச்சு.. சூப்பர் நியூஸ்!

news

சொல்லி விட்டு ஓய்வெடுப்பன் அல்ல நான்.. மக்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்.. முதல்வர் ஸ்டாலின்

news

இரண்டு பேரும் சமரசம் பேசுங்க.. ஜெயம் ரவி, ஆர்த்தி ரவிக்கு.. சென்னை குடும்ப நல கோர்ட் உத்தரவு

news

குறைக்கவோ, நீக்கவோ சொல்லத்தெரியாத அளவுதான் பெரிய ஸ்டார்களின் ஞானம் உள்ளதா?.. ப்ளூ சட்டை மாறன் கேள்வி

news

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல்.. நீதி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட அதிமுக கோரிக்கை!

news

சென்னை குன்றத்தூரில் நடந்த விபரீதம்.. பரிதாபமாக பறி போன 2 உயிர்கள்.. எலி மருந்து இவ்வளவு கொடூரமானதா?

news

Gold Rate.. சரிந்து வந்த தங்கம் இன்று உயர்ந்தது.. சவரனுக்கு ரூ. 80 அதிகரிப்பு!

news

ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம் 2024 : சிவனை இப்படி வழிபட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்