அரிட்டாபட்டி விவகாரம்.. எடப்பாடி பழனிச்சாமி நடிக்கிறார்.. முதல்வர் மு.க. ஸ்டாலின்

Dec 09, 2024,05:45 PM IST

சென்னை: சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் பழனிசாமி அவர்கள், அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


மதுரை அரிட்டாப்பட்டி டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முயற்சிக்கு எதிராக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட  தனித்தீர்மானத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் எட்பாடி பழனிச்சாமி பேசுகையில், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினாலும், இதுவரை தமிழக அரசு கண்டிக்கவில்லை. டங்ஸ்டன் சுரங்கம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்க வேண்டும். சுரங்கம் அமைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.




அதற்கு பதில் அளிக்கும் வகையில், பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவலை அவையில் பதிவு செய்யக் கூடாது. எங்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் அந்த சட்டம் நிறைவேறவில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு மத்தி அரசு ஏலம் விட்டாலும் மாநில அரசு ஒருபோதும் அனுமதி கொடுக்காது. மக்கள் பிரச்சினையில், திமுக அரசு எந்த காலத்திலும் அலட்சியமாக இருந்ததில்லை. நான் முதலமைச்சராக இருக்கும் வரை, தமிழ்நாட்டுக்குள் டங்க்ஸ்டன் சுரங்கம் அமையாது. அப்படி அமைந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று பேசினார்.


இதனைத் தொடர்ந்து மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானம் பரபரப்பான விவாதங்களுக்குப் பிறகு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,


சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் பழனிசாமி அவர்கள், அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்.


சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன்… தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது! என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Makara Jyothi 2025: சாமியே சரணம் ஐயப்பா.. சபரிமலையில் மகரஜோதி .. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

news

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு.. 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் கார்த்திக்.. கார் பரிசு!

news

Jailer 2 Teaser: அதிரடியாக வெளியானது ஜெயிலர் 2 டைட்டில் டீசர்.. வேற லெவல் ரஜினிகாந்த்!

news

ரசிகர்களே.. உங்களது அன்புக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையே இல்லை.. அஜீத் குமார்நெகிழ்ச்சி!

news

ஈரோடு கிழக்கில் களம் காணும் ஆசிரியை சீதாலட்சுமி.. வேட்பாளரை அறிவித்தார் சீமான்.. 2வது முறையாக போட்டி

news

இயற்பெயர்களுக்கு திரும்பும் முன்னணி நடிகர்கள்... தமிழ் சினிமாவின் புதிய டிரெண்ட்.. அப்போ ரஜினி?

news

தமிழ்நாடு முழுவதும் களை கட்டிய பொங்கல் திருநாள்.. வீடுகள் தோறும் Happy Pongalo Pongal!

news

பொங்கல் பண்டிகை 2025 : தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்.. நோட் பண்ணிக்குங்க!

news

மகிழ்ச்சி பொங்கட்டும்.. நல்லிணக்கம் வளரட்டும்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அதிகம் பார்க்கும் செய்திகள்