சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாளை ஒட்டி, அடையாற்றில் உள்ள மணிமண்டபத்தில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசனுக்கு இன்று 97வது பிறந்த நாள். இவர் 1927ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயரான கணேசன் என்ற பெயரை இவரது நடிப்புத்திறமையினை பார்த்த பெரியார், சிவாஜி கணேசன் என்று பெயர் சூட்டினார். அன்று முதல் இன்று வரை சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டு வருகிறார். சிவாஜி கணேசன், ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சிவாஜி கணேசனின் 97வது பிறந்த நாளை திரையுலகினரும், அவரது கும்பத்தினரும் கொண்டாடி வருகின்றனர். சிவாஜி பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மற்றும் திரைத்துறையினைச் சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க ஸ்டாலின்
அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அடையார் தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள அவரது மணி மண்டபத்திற்குச் சென்றார். அங்குள் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், அரிய புகைப்படத் தொகுப்புகளுடன் கூடிய புகைப்படக் கண்காட்சியையும் முதலமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
நடிப்புக்கும் நட்புக்கும் இலக்கணமாய்த் திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள்! தனது நடிப்பால் மக்களின் மனக்கண்ணில் வரலாற்று நாயகர்களின் பிம்பமாய் நிலைத்துவிட்ட நடிகர் திலகத்தை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்! என்று தனது எக்ஸ் தளப் பக்கத்திலும் முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு
திராவிட இயக்கத்தின் சிந்தனைகளை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் எழுத்துக்களால் வார்த்தெடுக்க - அவற்றை வெகு மக்கள் ஏற்கும் வகையில் தனது ஒப்பற்ற நடிப்பாற்றலால் கொண்டு சேர்த்த நடிகர் திலகம் - பத்ம ஸ்ரீ - செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 97-வது பிறந்த நாளில், கலைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுக் கூர்ந்து போற்றுவோம்! என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
நடிகர் கமலஹாசன்
சிவாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் கமலஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில், காலங்கள் மாறலாம், தொழில் நுட்பங்கள் கூடலாம், சினிமாவின் முகமே மாற்றுத்துக்கு இலக்காகியிருக்கலாம். ஆனால், நடிப்புக் கலையின் உச்சம் என்பது எப்படி இருக்கும் என்று காட்டிய மாபெரும் கலைஞன் சிவாஜி சாரின் பங்களிப்பு மறக்கவொண்ணாதது. பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டியவரை பிறந்த நாளில் வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து
தமிழ்நாட்டுக் கலைவெளியில் வந்துபோன கந்தர்வன் சிவாஜி அரைநூற்றாண்டாய்த் தமிழர்களின் சாயங்கால சந்தோஷம், தமிழர்களின் பண்பாட்டுப் படிமங்களை உடலென்ற ஊடகத்தில் ஏற்றிக் காட்டியவர் என சிவாஜி பிறந்த நாளில் கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கவிதாஞ்சலி:
தமிழ்நாட்டுக் கலைவெளியில்
வந்துபோன கந்தர்வன் சிவாஜி
அரைநூற்றாண்டாய்த்
தமிழர்களின்
சாயங்கால சந்தோஷம்
தமிழர்களின்
பண்பாட்டுப் படிமங்களை
உடலென்ற ஊடகத்தில்
ஏற்றிக் காட்டியவர்
ஒரே உடலில்
நூறாவதாரம் காட்டிய
நுண்மாண் நுழைபுலக் கலைஞர்
களிறு பிளிறும்
தமிழ்க் குரலைத்
தொண்டையில் இருத்தித்
தொண்டு செய்தவர்
ஆனால்,
வட்ட நிலாவை
ஆதிக்க மேகங்கள்
அங்குலம் அங்குலமாய்
மறைப்பதுபோல
சிவாஜி மெல்ல மெல்ல
மறக்கப்படுகிறார்
கூடாது
அடுத்தடுத்த
தலைமுறைகளுக்கும்
அவர் கடத்தப்பட வேண்டும்;
ஊடகங்கள்
உயர்த்திப் பிடிக்க வேண்டும்
அவர்
சொல்லித்தந்த தமிழைப்
பிறக்கும் பிள்ளைகளும்
பேசவேண்டும்
அவரை நான்
மறக்க மாட்டேன்
விண்மீன்கள் கண்ணுறங்கும்
அர்த்த ராத்திரியில்
இரவின் நிசப்தத்தில்
ஒரே ஒரு கைதட்டல் மட்டும்
கேட்கிறது என்றால்
வைரமுத்து சிவாஜி படம்
பார்த்துக்கொண்டிருக்கிறான்
என்று உலகம் உணர்வதாகுக
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}