மழையால்.. என்ன பாதிப்பு ஏற்பட்டாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Dec 13, 2024,01:39 PM IST

சென்னை: மழையால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளது என அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாட்டில் நேற்று  முதல்  பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஏராளமான இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், அணைகள் அனைத்து நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கட்டிடத்தில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டோம். திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. மீட்பு பணிக்காக தென்காசிக்கு அமைச்சர் கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரனை அனுப்பி வைத்துள்ளோம். 


ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி ரூ. 2000 பொது மக்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டு விட்டது. எவ்வளவு மழை பாதிப்பு ஏற்பட்டாலும் அதை சந்திக்க அரசு தயாராக உள்ளது. மழை காரணமாக மிகப்பெரிய அளவுக்கு பாதிப்பு வந்ததாக தகவல் வரவில்லை. ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கும் முன்பு உரிய முன்னெச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. 


ஒன்றிய அரசு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை. மழை நிலவரம், பாதிப்புகள், அணைகளின் நீர் திறப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஒன்று சேர்த்து கடுமையாக எதிர்ப்போம். கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிப்போம் என்றார் அவர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

6 அல்ல 8 முறை.. பாஜக தலைவர் அண்ணாமலை.. தன்னைத் தானே.. சாட்டையால் அடித்து போராட்டம்!

news

சாட்டையும்.. புளிச்ச கீரையும்.. இப்படித்தான் செய்வார்களாம்.. தங்களைத் தாங்களே அடித்துக் கொள்வது ஏன்?

news

போராட எத்தனையோ வழிகள் உள்ளன.. அண்ணாமலை செய்வது கேலிக்கூத்தாக இருக்கு.. ஆர்.எஸ்.பாரதி

news

2022ம் ஆண்டில்.. ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யபிரியா.. சதீஷ் குற்றவாளி!

news

December.. எம்ஜிஆர் முதல் மன்மோகன் சிங் வரை.. மீண்டும் தனது குரூர முகத்தைக் காட்டிய டிசம்பர்!

news

சென்னையில் இன்று மாலை தொடங்குகிறது 48வது புத்தக கண்காட்சி.. ஜனவரி 12 வரை வாசிப்பு விருந்து!

news

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதர்.. சிறந்த பொருளாதார மேதை.. நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

news

மறைந்த மன்மோகன் சிங் இறுதிச் சடங்குகள்.. முழு அரசு மரியாதைகளுடன்.. நாளை ராஜ்காட்டில் நடைபெறும்

news

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேரில் சென்று அஞ்சலி.. டெல்லியில்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்