7வது முறையாக திமுக ஆட்சி அமையும்.. ஏற்றம் காணும் அரசாக அது இருக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Jan 11, 2025,05:20 PM IST

சென்னை: நிச்சயமாக 7வது முறையாக ஆட்சியமைத்து ஏற்றம் காணும் அரசாக திமுக அரசு அரசமைக்க போகிறது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


2025ம் ஆண்டிற்கான முதல் சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 6வது நாளாக நடைபெறும் சட்டசபை கூட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று கடைசி நாள் என்பதால் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். தனது பேச்சின் தொடக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். 


அதன்பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது: 




சட்டமன்றத்தின் மாண்பையும், மக்களின் எண்ணங்களையும் மதிக்காமல் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்த துணிந்ததன் வாயிலாக தான் வகிக்கும் பதவிக்கும், பொறுப்புக்கும் இழுக்கு ஏற்படும் காரியத்தை அரசியல் உள்நோக்குடன் ஆளுநர் செய்தது இந்த மன்றம் இதுவரை காணாதது. இனியும் இதனை காணக் கூடாது.


அவர் எங்களை புறக்கணிப்பதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஏன் என்றால் திராவிட இயக்கமே புறக்கணிப்புக்கும் அவமானத்திற்கும் எதிராக உதயமானது தான். சமூக சீர்திருத்த இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி ஆறாவது முறையாக ஆட்சியை கைப்பற்றிய வரலாறு திமுகவுக்கு தான் உண்டு. நிச்சயமாக ஏழாவது முறையாக ஆட்சி அமைத்து ஏற்றம் காணும் அரசாக திமுக அரசு அமையப்போகிறது. 


ஆறாவது முறையாக ஆட்சி அமைத்த போது இது விடியல் ஆட்சியாக அமையும் என்று கூறினோம். இருட்டில் கிடக்கும் எதிர்கட்சிகள் விடியல் எங்கே என்று கேட்கிறார்கள். விடியல் கொடுப்போம் என்று சொன்னது மக்களுக்கு தானே தவிர எதிர்கட்சிகளுக்கு அல்ல. விடியலைக் கண்டால் அவர்களுக்கு கண்கள் கூசத்தானே செய்யும்.


நான் செல்லும் இடமெல்லாம் கூடும் மக்களின் எழுச்சி தான் விடியலின் அடையாளம். விடியல் பயணம் மகளிர் சேமிப்பை அதிகரித்து உள்ளது. மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை பெரும் மகளிரின் முகங்களை பாருங்கள் அது தான் விடியல் ஆட்சி. அரசு பள்ளியில்  பயின்று உயர் கல்வி செல்ல முடியாத மாணவிகளுக்காக கொண்டுவரப்பட்டது தான் புதுமைப்பெண் திட்டம். இந்த புதுமைப்பெண் திட்ட மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 


அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தை விரிவு படுத்தி உள்ளோம். தமிழ்நாட்டு மாணவிகள் என்னை அப்பா அப்பா என்று அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி அடைகின்றேன். புதுமைப்பெண் திட்ட மூலம் உயர் கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தை விரிவு படுத்தி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

அதிகம் பார்க்கும் செய்திகள்