நெல்லை: திருநெல்வேலி டூ சென்னை மற்றும் சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு செப்டம்பர் 23 முதல் தொடங்கியது.
செப்டம்பர் 24ஆம் தேதி இன்று நெல்லை டூ சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக முடிந்துள்ளன. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது .
முதலில் வந்தே பாரத் ரயில் சென்னையிலிருந்து நெல்லைக்கு சென்றது. அதனைத் தொடர்ந்து மறு மார்க்கமாக நெல்லையிலிருந்து சென்னைக்கு புறப்பட்டது. வந்தே பாரத் ரயிலின் இலக்காக நிர்ணயித்த நேரத்தை எட்டியதில் ரயில்வே அதிகாரிகள் திருப்தி அடைந்துள்ளனர். அதேசமயம் வந்தே பாரத் ரயிலில் எப்போது பயணிக்கலாம் என்ற ஆர்வமும் மக்களிடையே அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது. சென்னையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் ,திருச்சி திண்டுக்கல் ,மதுரை, விருதுநகர் போன்ற தடங்களில் நின்று பின்னர் நெல்லையை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையிலிருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் சென்றடையும்.
செவ்வாய்க்கிழமை தவிர இதர ஆறு நாட்களும் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் இயங்கும்.
நேர அட்டவணை:
வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில், நெல்லையிலிருந்து காலை 6 மணிக்கு கிளம்பி சென்னை எழும்பூரை பிற்பகல் 1.50 மணிக்கு வந்தடையும்.
விருதுகரில் காலை 7.13 மணிக்கு நிற்கும். மதுரை - 7.50, திண்டுக்கல் - 8.40, திருச்சி - 9.50, விழுப்புரம் - 1.54, தாம்பரம் - 1.13 மணிக்கு நிற்கும்.
மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர் - பிற்பகல் 2.50 புறப்பட்டு நெல்லையை இரவு 10.40 மணிக்கு சென்றடையும்.
தாம்பரம் - 3.18, விழுப்புரம் - 4.39, திருச்சி - 6.40, திண்டுக்கல் - 7.56, மதுரை - 8.40, விருதுநகர் - 9.13.
பயண நேரம் - 7.50 மணி நேரத்தில் சென்றடையும். மொத்த பயண தூரம் 652.49 கிலோமீட்டர். ரயில் செல்லும் வேகம் மணிக்கு 83.30 கிலோமீட்டர் ஆகும்.
இந்த ரயிலின் கட்டணம் எக்சிகியூட்டிவ் சேர் கார் வகுப்புக்கு ரூ. 3,005 ஆகவும், ஏசி சேர் கார் கட்டணம் ரூ. 1,610 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
{{comments.comment}}