சென்னை: சென்னை டூ நெல்லை இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில் கட்டணத்தை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே. செப்டம்பர் 24ம் தேதி இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் கட்டணங்கள் 2 வகையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி டூ சென்னை இடையே இயங்கவுள்ள வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகராக வியாழக்கிழமை முடிந்துள்ளது. சோதனை ஓட்டம் குறித்த நேரத்தில் முடிந்துள்ளதால் ரயில்வே பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த ரயிலின் டிக்கெட் கட்டண விவரம் வெளியாகியுள்ளது. ஏசி சொகுசு வகுப்பு கட்டணம் ரூ.3025 எனவும். சாதாரண கட்டணம் ரூ.1620 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருநெல்வேலி டூ சென்னை இடையே இயக்க உள்ள வந்தே பாரத் விரைவு சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தெடங்கி வைக்க உள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் 2 வந்தே பாரத் ரயில் சேவைகள் உள்ளன. தற்போது இயங்கவுள்ளது 3வது வந்தே பாரத் ரயில் சேவையாகும்.
இது குறித்து தெற்கு ரயில்வே தலைமை பொறியாளர் முகுந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருநெல்வேலி-சென்னை இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் விரைவு ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். சென்னை-திருநெல்வேலி இடையிலான 650 கி.மீ. தொலைவை 7.50 மணி நேரத்தில் கடக்கும். இன்னும், இந்த ரயிலின் வேகத்தை 130 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த ரயிலில் 52 பேர் வரை பயணிக்கக்கூடிய ஒரு எக்ஸிகியூட்டிவ் பெட்டி உள்ளிட்ட 8 பெட்டிகள் உள்ளன. மற்ற 7 பெட்டிகளிலும் தலா 76 பேர் பயணிக்கலாம். ரயில் என்ஜின் உள்ள பெட்டியிலும் 46 பேர் வரை பயணிக்க முடியும். தற்போதைய நிலையில் 540 பேர் வரை இந்த ரயிலில் பயணிக்கலாம்.
விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஞாயிற்றுக்கிழமை தொடக்க விழா நடைபெற்றாலும், திங்கள்கழமை இருந்து தான் முறைப்படி இயக்கப்படுகிறது. ரயிலில் ஒலிப் பெருக்கி அறிவிப்புகள் இடம்பெறும். உணவுப் பரிமாறப்படும். ஊனமுற்றோருக்கான வசதிகள் , இலவச வைஃபை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெறும் என்றார்.
வாரத்தல் 6 நாட்கள் ரயில் இயக்கப்பட உள்ளது. வியாழக்கிழமை மட்டும் இயக்கப்படாது என ரயில்வே துறை வட்டாரங்களில் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
{{comments.comment}}