சென்னை: ரம்ஜான் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்கள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏப்ரல் 10, ஏப்ரல் 12, ஏப்ரல் 13 மற்றும் ஏப்ரல் 14 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழக முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளன.
கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஏப்ரல் 10ம் தேதி 315 பேருந்துகளும், ஏப்ரல் 12ஆம் தேதி 290 பேருந்துகளும், ஏப்ரல் 13-ஆம் தேதி 340 பேருந்துகளும் இயக்கப்படும். அதேபோல சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 10, 12, 13 அன்று 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 10ம் தேதி 315 பேருந்துகளும், 12ஆம் தேதி 290 பேருந்துகளும், 13-ஆம் தேதி 340 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 10ஆம் தேதி 40 பேருந்துகளும், 12ஆம் தேதி 40 பேருந்துகளும், 13ஆம் தேதி 40 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலும் சிறப்பு பேருந்துகளை இயக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் புதன்கிழமை அன்று 70878 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 6610 பயணிகளும் சனிக்கிழமை 4143 பயணிகளும் ஞாயிறு அன்று 11,375 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!
தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!