லக்னோ: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான சேசிங்கை வெற்றிகரமாக நிகழ்த்தி சூப்பரான ஒரு வெற்றியை பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை அணி வெற்றி பெற்றிருப்பது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கேப்டன் தோனியின் அட்டகாசமான ஆட்டம் அணிக்கு சிறப்பான வெற்றியைத் தேடிக் கொடுத்து விட்டது. தோனியும், சிவம் துபேவும் இணைந்து கடைசி ஓவர்களில் வான வேடிக்கை காட்டி அசத்தி விட்டனர். தோனி பழைய தோனியின் வேகத்தைக் காட்டி ரசிகர்களை துள்ள வைத்து விட்டார். சிவம் துபே கட்டையைப் போட்டாலும் கூட கடைசி நேரத்தில் மின்னல் வேகத்தைக் காட்டி லக்னோவை மிரட்டி விட்டார்.
முன்னதாக இன்றைய போட்டியில் அட்டகாசமாக பவுலிங் செய்து அசத்தி விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த போட்டிகளில் இல்லாத அளவுக்கு, முதல் முறையாக பவர்பிளே ஓவர்களின்போது 50 ரன்களுக்கும் குறைவான ரன்களை விட்டுக் கொடுத்தனர் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள். இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி.
வழக்கமான முறையில் இல்லாமல் இந்த முறை சென்னை பந்து வீச்சாளர்கள் புலிப் பாய்ச்சலுக்கு மாறி மிரட்டி விட்டனர். வழக்கத்தை விட அதீதமான வேகத்தையும், விவேகத்தையும் இந்த முறை சென்னை பவுலர்கள் பயன்படுத்தினர். இதனால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் லக்னோ அணியை தடுத்து நிறுத்தியது சென்னை. சேசிங்கிலும்
Chennai Super Kings - Chasing Highlights
கடந்த போட்டிகளைப் போல இல்லாமல் இந்த முறை பவர்பிளேவில் அதிரடி காட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ். குறிப்பாக இளம் வீரர் ஷேக் ரஷீத் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 2வது ஓவரில் அவர் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியபோது ரசிகர்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.
ஷேக் ரஷீத் அடுத்தடுத்து விளாசிய பவுண்டரிகளால் சென்நை சூப்பர் கிங்ஸின் சேசிங் அதிரடியாக மாறியுள்ளது. முதல் ஐபிஎல் போட்டி என்ற பயமே இல்லாமல் பிரித்து எடுத்தார் ஷேக் ரஷீத்.
4.5 ஓவரின்போது ஆவேஷ் பந்தை தூக்கி அடித்த ஷேக் ரஷீத் கேட்ச் ஆகி ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ஸ்கோர் 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள். 18 பந்துகளில் 27 ரன்களை விளாசி சூப்பரான கேமியோ கொடுத்து வெளியேறியுள்ளார் ஷேக் ரஷீத்.
முக்கியமான விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் போட்டியை தங்களது கட்டுக்குள் கொண்டு வர தீவிரமாக முயன்று வருகிறது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். ஜடேஜா அவுட்டான நிலையில் களம் இறங்கிய விஜய் சங்கர் முதல் பந்தையே பவுண்டரிக்கு மாற்றி டென்ஷனை சற்றுக் குறைத்துள்ளார்.
சிவம் துபே இன்றைய போட்டியிலும் அதிரடி காட்டத் தவறினார். கட்டையைப் போடும் வகையில் அவர் விளையாடியதால் ரசிகர்கள் எரிச்சலடையும் நிலை ஏற்பட்டது.
சிவம் துபே ஒரு பக்கம் போரடித்து வந்த நிலையில், மறுபக்கம் அடித்து ஆடி வந்த விஜய் ஷங்கர் 9 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
Match Highlights - LSG batting
முதல் ஓவரிலேயே தனது முதல் விக்கெட்டை இழந்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். 6 ரன்களை எடுத்திருந்த நிலையில், கலீல் அகமது போட்ட அருமையான பந்தைத் தூக்கி அடித்த எய்டன் மாக்ரமை, ராகுல் திரிபாதி அபாரமாக கேட்ச் செய்து பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். மிகவும் கஷ்டமான இந்த கேட்ச்சை அட்டகாசமாக பிடித்து அசத்தினார் திரிபாதி.
3.5 ஓவரின்போது கம்போஜ் வீசிய பந்தை அடிக்க முயன்ற நிக்கோலஸ் பூரன் எல்பிடபிள்யூ ஆனார். முதலில் அம்பயர் அவுட் தரவில்லை. ஆனால் டிஆர்எஸ் முறையை சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்தது. அதில் நிக்கோலஸ் பூரன் எல்பிடபிள்யூ ஆனது தெரிய வந்ததைத் தொடர்ந்து தனது 2வது விக்கெட்டை இழந்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். 4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 23 ரன்களை எடுத்திருந்தது லக்னோ அணி.
பவர் பிளே முடிவில் (6 ஓவர்கள்) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்களை எடுத்திருந்தது.
9.3 ஓவரின்போது 73 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது 3வது விக்கெட்டை இழந்தது லக்னோ அணி. ஜடேஜா பந்து வீச்சில் அபாயகரமான பேட்ஸ்மேன் மிட்சல் மார்ஷ் போல்டு ஆகி ஆட்டமிழந்து வெளியேறினார். 25 பந்துகளில் 30 ரன்களை விளாசியிருந்தார் மார்ஷல்.
12.5 ஓவரின்போது பதீரனா பந்தை ஆயுஷ் பதோனி தூக்கி அடித்தபோது நேராக அது விஜய் சங்கரின் கையில் போய் தஞ்சமடைந்தது. ஆனால் அது நோபால் என்று அறிவிக்கப்பட்டதால் பதீரனாவும், சென்னை சூப்பர் கிங்ஸும் ஏமாற்றத்துக்குள்ளானார்கள்.
அடுத்து வந்த 14வது ஓவரின் முதல் பந்தில் மீண்டும் ஒரு அவுட்டிலிருந்து தப்பினார் பதோனி. ரவீந்திர ஜடேஜா பந்தை அடித்த பதோனி, எல்பிடபிள்யூ ஆனார். ஆனால் லக்னோ எடுத்த ரெவ்யூவின்போது அது நாட் அவுட் என்று தெரிய வந்ததால் மீண்டும் பதோனி தப்பினார்.
ஆனால் பதோனியை துரத்தி வந்த விதி, அவரை தோனி ரூபத்தில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தது. 13.4 வது ஓவரின்போது அதே ஜடேஜா வீசிய பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்றார் பதோனி. ஆனால் அதற்குள் படு வேகமாக பந்து தோனி கைக்குப் போய் அதை அவர் எடுத்து ஸ்டம்ப்ட் ஆக்கி வெளியேற்றினார். 3 வாய்ப்புகள் கிடைத்த நிலையில் 3வது வாய்ப்பு பதோனிக்கு துரதிர்ஷ்டமாகி விட்டது.
17.3வது ஓவரின்போது பதீரனா பந்து வீச்சின்போது, ரிஷப் பந்த் சிக்ஸர் விளாசி தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். 42 பந்துகளில் 54 ரன்களைக் குவித்தார் ரிஷப் பந்த்.
19.1வது ஓவரின்போது பதீரனா வீசிய பந்தை அடித்து ஆடி ஓட முயன்றார் அப்துல் சமத். ஆனால் கேப்டன் தோனி அவரை அழகாக ரன் அவுட் செய்து வெளியேற்றினார். ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள். அடுத்த பந்தில் மேலும் ஒரு விக்கெட்டைப் பறி கொடுத்தது லக்னோ. பதீரனா பந்தை தூக்கி அடித்தார் ரிஷப் பந்த். ஆனால் பந்து அப்படியே பின்னோக்கி கீழே வந்து தோனி கையிலேயே தஞ்சமடைந்தது. பந்த் சிறப்பான பேட்டிங்கைக் கொடுத்து விட்டு 63 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மாநில உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து ஆராய ஜோசப் குரியன் தலைமையில் குழு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதிமுக பொதுக்குழு கூட்டம் மே 2ல் நடைபெறும்:எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!
நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி
தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!
ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!
இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
கோடை விடுமுறையை முன்னிட்டு.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்இடிசி முடிவு..!
சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்.. அன்போடு அழைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!
பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்
{{comments.comment}}