பிபியை எகிற வைத்து.. சேப்பாக்கத்தில்.. பிரில்லியன்ட்டான முதல் வெற்றியை சுவைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

Mar 23, 2025,11:11 PM IST

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள், நமது வீரர்களை தண்ணி குடிக்க வைத்து விட்டனர். இருந்தாலும் ரச்சின் ரவீந்திராவின் பிரில்லியன்ட்டான ஆட்டத்தால் சென்னை அணி தனது முதல் வெற்றியை சுவைத்தது. 4 விக்கெட்  வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது.


முன்னதாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, டக் அவுட் ஆகி மும்பை ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி விட்டார். அதை விட முக்கியமாக டக் அவுட் ஆவதில் புதிய சாதனையையும் அவர் படைத்தார்.


அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் -  மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதல் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தார். சென்னை பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் பெரிய அளவிலான ஸ்கோரை மும்பையால் எட்ட முடியாமல் போனது.


முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டார். 4 பந்துகளை சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். கலீல் அகமது வீசிய பந்தை சரியாக கணிக்கத் தவறிய ரோஹித் சர்மா சிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.




ஐபிஎல் கெரியரில் 3வது முறையாக கலீல் அகமது பந்து வீச்சில் ரோஹித் சர்மா டக் அவுட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் இது அவரது 18வது டக் அவுட் ஆகும். ஏற்கனவே கிளன் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் தலா 18 முறை டக் அவுட் ஆகியுள்ளனர். அதை சமன் செய்துள்ளார் ரோஹித் சர்மா.


மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ரியான் ரிக்கிள்டன் 13, வில் ஜேக்ஸ் 11, திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தனர். கேப்டன் சூர்ய குமார் யாதவ் 29 ரன்கள் சேர்த்தார். பெரிய அளவிலான பார்ட்னர்ஷிப் அமையாததால் மும்பை இந்தியன்ஸ் அணி பெரிய அளவிலான ஸ்கோரை எடுக்க முடியாமல் திணறியது. கடைசி நிமிடத்தில் தீபக் சஹர் வான வேடிக்கை காட்டினார். இருப்பினும் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்தது மும்பை இந்தியன்ஸ்.


இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் தனது சேசிங்கைத் தொடங்கியது. கடைசி வரை விளையாடி பிபியை எகிற வைப்பதில் சென்னை வீரர்கள் கில்லாடி என்பதை இன்றைய முதல் போட்டியிலும் நிரூபித்தனர். கேப்டன் கெய்க்வாட் அபாரமாக ஆடி அரை சதம் போட்டு அவுட்டான பிறகு ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. முக்கிய விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. இடையில் சிங்கிள் ரன்களாக எடுக்க ஆரம்பித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். அடடா இன்னிக்கும் பிபி மாத்திரையை போட்டாக வேண்டும் போலவே என்று ரசிகர்கள் டென்ஷனான நிலையில் ரச்சின் ரவீந்திரா பிரித்து மேய்ந்து பிரமாதமான அரை சதம் போட்டு கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.


18.4 ஓவரில் ஜடேஜா அவுட்டாக, தல தோனி களம் இறங்கினார். வெறும் 4 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் தோனி களம் இறங்கியதால் பவுண்டரி அடித்து கடையை மூடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2 டாட் பால் விட்டார் தோனி.  கடைசியில் ரவீந்திரா வெற்றிக்கான ரன்களை சிக்ஸ் அடித்து எட்டினார். தோனி ஆட்டமிழக்கவில்லை, ரன் எடுக்கவும் இல்லை.. ரச்சினை வெற்றிக்கான ரன்னை எடுக்க வைத்து தான் ஒரு தல என்பதை நிரூபித்து விட்டார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்