அப்பாடா ஷாக் அளிக்காமல்.. சந்தோஷத்துடன் ரசிகர்களை வழி அனுப்பி வைத்த.. சென்னை சூப்பர் கிங்ஸ்

May 12, 2024,09:57 PM IST

சென்னை: சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றியைப் பெற்றது.  இதை அடுத்து மிக முக்கியமான அறிவிப்பை எதிர்நோக்கி பதை பதைப்புடன் காத்திருந்த சென்னை ரசிகர்களுக்கு அந்த அதிர்ச்சி வைத்தியத்தை அளிக்காமல் இன்றைய நாளை முடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்.


நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் தனது கடைசி லீக் போட்டியை விளையாடியது சென்னை சூப்பர் கிங்ஸ்.  முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 142 ரன்களைக் குவித்த நிலையில், அதை எளிதாக சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்களை இழந்து தனது வெற்றியைத் தட்டிச் சென்றது.




சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைத்த 50வது வெற்றி இது. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர் அஸ்வின் தனது 50வது ஐபிஎல் விக்கெட்டையும் இன்று தனது சொந்த ஊரில் எடுத்தார். இவை இன்றைய போட்டியின் முக்கிய அம்சங்கள். ரவீந்திர ஜடேஜா  பேட்டிங்கின்போது, பாதை மாறி ஓடி பீல்டிங்கில் குறுக்கீடு செய்ததற்காக அவுட்டானது இன்னொரு முக்கிய அம்சம் என்று சொல்லலாம்.


சிஎஸ்கே வைத்த சஸ்பென்ஸ்


இந்த நிலையில் போட்டி முடிந்ததும் காத்திருங்கள் என்று சிஎஸ்கே நிர்வாகம் முன்னதாக ஒரு டிவீட் போட்டிருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  தோனி ஓய்வு பெறப் போகிறார். அந்த ஓய்வு முடிவை ரசிகர்கள் மத்தியில் அறிவிக்கப் போகிறார்.. இந்த அறிவிப்புக்காகத்தான் ரசிகர்களைக் காத்திருக்கச் சொல்லியுள்ளது சிஎஸ்கே நிர்வாகம் என்று ஒரு டாக் ஓடியது. அதேசமயம், இல்லை இல்லை இன்னும் ஒரு சீசன் தோனி ஆடுவார்.. அந்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று இன்னொரு பேச்சு அடிபட்டது.




தோனி ஓய்வு பெறப் போகிறார் என்பதை எங்களால் ஏற்கவே முடியாது. நாங்கள் அழுது விடுவோம்.. தயவு செய்து அந்த அறிவிப்பை மட்டும் வெளியிடாதீங்க என்று பலரும் இப்போதே டிவீட் போட ஆரம்பித்து விட்டனர். அதைத்தான் சொல்லப் போகிறார்கள்.. எங்களால தாங்க முடியாதுடா.. ப்ளீஸ் அதை மட்டும் செய்யாதீங்க என்று பலரும் அழுகை ஸ்மைலியுடன் டிவீட் போட்டு வந்தனர்.


இந்த நிலையில் போட்டி முடிவடைந்ததும் என்ன மாதிரியான அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு அப்படி அவர்கள் எதிர்பார்த்தது போல அதிர்ச்சியான எந்த செய்தியும் வெளியாகவில்லை. மாறாக தோனி தனது சகாக்களுடன் மைதானத்தை வலம் வந்தார். ரசிகர்களிடம் டென்னிஸ் பந்துகளை தூக்கிப்போட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருடன் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னாவும் உடன் வந்தார்.


இன்றைய லீக் போட்டியில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த கடைசி லீக் போட்டியில், சென்னை அணி மிகச்சிறந்த வெற்றியை பெற்றதை கொண்டாடும் வகையில் அவர் மைதானத்தை வலம் வந்ததாக கருதப்படுகிறது. அதே சமயம்  முக்கிய அறிவிப்பு வெளியிடுவதாக உண்மையில் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. காரணம் இன்றைய போட்டியில் ஒரு வேளை சென்னை அணி தோற்று இருந்தால் ஐபிஎல் அடுத்த கட்டத்திற்கு அது நகர்வது சிரமமாக இருந்திருக்கும். எனவே அதை மனதில் கொண்டே இன்று தனது முக்கிய முடிவை தோனி அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் அப்படி நடக்காமல் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயித்திருப்பதால் அடுத்த ச சுற்றுக்கான வாய்ப்புகளை அது பிரகாசப்படுத்தி உள்ளது. எனவே இப்போது எந்த அதிர்ச்சியான அறிவிப்பையும் வெளியிட வேண்டாம் என்று தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் கேட்டுக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எது எப்படியோ ரசிகர்களுக்கு எந்த அதிர்ச்சியும் தராமல் சந்தோஷத்துடன் வழி அனுப்பி வைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்