சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயில் சேவை, இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக மறுசீரமைப்பு பணிகள் நடத்தப்பட்டு வந்தது. இதனால் தாம்பரம்-கடற்கரை, கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கங்களில் செல்லும் மின்சார ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. அதோடு வெளியூர்களில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காமலும் சென்று வந்தன. இதனால் புறநகர்களுக்கு செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மின்சார ரயில் சேவையில் செய்யப்பட்ட இந்த திடீர் மாற்றத்தால் சென்னையில் காலை மற்றும் மாலை வேளைகளில் வழக்கத்தை விட பஸ்கள் மற்றும் ஆட்டோக்களில் அதிக கூட்டம் காணப்பட்டது. பலர் சொந்த வாகனங்களிலேயே பயணிக்க துவங்கியதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரயில்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
முதலில் ஆகஸ்ட் 14 வரை மட்டுமே மின்சார ரயில் சேவை நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில், பிறகு ஆகஸ்ட் 18 வரை 55 மின்சார ரயில்களின் சேவை நிறத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து ஆகஸ்ட் 19ம் தேதி முதல் தான் மின்சார ரயில்கள் இயக்கப்படும் செல்லப்பட்டது. சீரமைப்பு பணிகள் தற்போது நிறைவடைந்து விட்டதால், முற்பகலுக்கு மேல் ரயில் சேவை மீண்டும் இயல்பாக தொடங்கியது.
செங்கல்பட்டு-தாம்பரம்-கடற்கரை மின்சார ரயில் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதோடு தாம்பரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் வழக்கம் போல் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அனைத்து ரயில்களும் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டை கண்டித்து.. தீர்மானங்களை கொண்டு வாங்க பார்ப்போம்..எடப்பாடி பழனிச்சாமி சவால்
அமித்ஷா பிரஸ்மீட்டில் காத்திருக்கும் 7 சேர்கள்.. அமரப் போகும் தலைவர்கள் யார்.. எகிறும் சஸ்பென்ஸ்!
திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம்... புதிதாக திருச்சி சிவா நியமனம்!
அமித்ஷாவை சந்திக்கும் அதிமுக தலைவர்கள்.. தேமுதிகவுக்கு டைம் கொடுக்க மறுத்ததா பாஜக?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 11, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
கலக்கும் குட் பேட் அக்லி.. புஷ்பா பட இயக்குனர் சுகுமார் படத்தில் அஜித் நடிப்பாரா..?
Panguni Utthiram.. பங்குனி உத்திரம் இன்று.. 12ம் தேதி முழு நிலவு.. மிக மிக சிறப்பு!
சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் தோனி.. ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய.. ருதுராஜ் உருக்கமான பதிவு!
Thala is Back: மீண்டும் கேப்டனானார் தல தோனி.. ருத்துராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்!
{{comments.comment}}