சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் இன்று காலையில் என்கவுண்டர் செய்தனர்.
சென்னை பிராட்வே காக்கா தோப்பு பகுதியில் உள்ள வள்ளுவர் நகரில் வசித்து வந்தவர் ராமலிங்கம். அவரது மகன்தான் 36 வயதாகும் பாலாஜி. காக்காதோப்பு பாலாஜி என்று அழைப்பார்கள். இவர் முதலில் சிறு சிறு அடிதடிகளில் ஈடுபட்டு பின்னர் பெரிய ரவுடி ஆனார். பல்வேறு கொலை, ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்டவற்றில் இவருக்குத் தொடர்பு உள்ளது.
சென்னையில் பெட்ரோல் குண்டு வீசியது உட்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியும் கூட. இவர் மீது இதுவரை 5 கொலை வழக்குகள், 15 கொலை முயற்சி வழக்குகள், ஆள் கடத்தல் வழிப்பறி என மொத்தம் 59 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தவிர அவர் மீது 12 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். அதேபோல் சிறையில் இருந்து கொண்டே கூலிப்படைகளை ஏவி பல்வேறு கொலைகளை செய்ததும் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவராக கருதப்படும் சம்பவம் செந்திலுக்கு எதிர் கோஷ்டியில் இருந்தவர் ரவுடி பாலாஜி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை இன்று அதிகாலை 4:30 மணி அளவில் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
போலீசாரை தாக்க முயன்ற போது தற்காப்புக்காக அவரை சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலாஜியின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026ல் சட்டமன்ற தேர்தல்.. நாலே கூட்டணிதான்.. விறுவிறுப்பாகும் கூட்டணிகள்.. பரபரக்கும் அரசியல் களம்!
புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
பொன்முடி பேச்சு.. ஏப்., 16ம் தேதி அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி!
தேசிய ஜனநாயக கூட்டணியில்.. அதிமுக இணைவது மகிழ்ச்சி.. பிரதமர் நரேந்திர மோடி..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 12, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை