சென்னை: மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரம் படுத்துக் கிடந்த ஷம்பு என்பவரை மீட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு தேவையான சிகிச்சை கொடுத்து பாதுகாப்பாக பராமரித்து வரும் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
சென்னை அரசினர் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை டாக்டர்கள் செய்த இந்த செயலானது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இவர்களின் செயலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியமும் பாராட்டியுள்ளார்.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சாலையோரம் கிடந்தார். தகவவலறிந்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவர்கள் அவரை அங்கிருந்து மீட்டு அவருக்குரிய பாதுகாப்பும் தேவையான சிகிச்சையும் அளித்தனர். எந்திரிக்கூட முடியாத நிலையில் இருந்த அவரை தூக்கி உட்கார வைத்தனர். படுத்துகிடந்த அவரின் உடலில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அதில் அவரை கொண்டு சென்றனர்.
அவரது காயங்களையும் உடலையும் நன்றாக துடைத்து பின்னர் வாகனத்தில் ஏற்றி அவரை மருத்துமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து அவருக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர். தற்போது ஷம்பு நலமாக உள்ளர். இவர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
மருத்துவர்களின் சேவை மகத்தானது என்பதனையும் அவர்களின் மனிதநேயம் மெச்சத்தக்கது என்பதையும் இதன் மூலம் அறியலாம். இன்னும் மனிதமும் மனித நேயமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் எனலாம். இந்த சம்பவம் நெட்டிசன்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், அவருக்கு உதவிய டாக்டர்களையும் வாழ்த்தி வருகின்றனர்.
CSK vs KKR.. பர்ஸ்ட் பேட்டிங் மாமே.. கேப்டன் தோனி மாஜிக்குக்காக ரசிகர்கள் வெயிட்டிங்!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
{{comments.comment}}