சென்னை: தமிழ்நாட்டுக்கு இந்த நவம்பர் மாதத்தின் மீதமுள்ல நாட்களில் நிறைய மழை கிடைக்கப் போகிறது. அக்டோபரை விட இப்போது கூடுதலாகவே மழை பெய்து வருகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை சூப்பராக பெய்து வருகிறது. விட்டு விட்டு பார்ட் பார்ட்டாக ஒவ்வொரு பகுதியா மழை பெய்து வருகிறது. ஆரம்பத்தில் சற்று நிதானமாக இருந்த மழை இப்போது ஷிப்ட் போட்டு தமிழ்நாட்டை அங்குலம் அங்குலமாக நனைத்துக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், நவம்பர் மாதத்தின் மீதமுள்ள நாட்களில் தமிழ்நாட்டுக்கு நிறைய மழை கிடைக்க வாய்ப்பிருப்பதாக நல்ல செய்தி சொல்லியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியின்போது கூறுகையில், தமிழ்நாட்டுக்கு வரும் நாட்களில் நிறைய மழை காத்திருக்கிறது. அக்டோபர் மாதம் குறைவான மழையே நமக்குக் கிடைத்தது. அந்தக் குறையா இப்போது பெய்து வரும் உபரி மழை சரி செய்து விடும். அட்டகாசான கம்பேக்கைக் கொடுத்துள்ளது வட கிழக்குப் பருவ மழை.
தென் தமிழ்நாட்டில் உள்ள அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. நவம்பர் கடைசி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் ஒரு சுழற்சி ஏற்பட வாய்பபுள்ளது. அது எந்தப் பக்கம் போகும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தற்போது வட தமிழகத்தை நோக்கித்தான் நேற்று மழை பெய்தது. இதைத் தீவிரம் என்று சொல்ல முடியாது. பரவலான மழை கிடைத்தால்தான் அதை தீவிரம் என்று சொல்லலாம். தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக வட மாவட்டங்களில் மழை கிடைத்துள்ளது. இது வருகின்ற நாட்களில் வலுவிழந்து, அதாவது 23, 24 ஆகிய தேதிகளில், அரபிக் கடலில் பக்கம் இது போவது போல தெரிகிறது. அப்படிப் போகும்போது, உள் மாவட்டங்களில் அதாவது, மதுரை, கரூர் நாமக்கல், சேலம், விருதுநகர் போன்ற மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். இரவு நேரத்தில் காலை வரை நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 4 நாட்களுக்கு தொடர்ந்து இப்படி மழை பெய்ய வாய்ப்புள்ளது. அரபிக் கடல் பக்கம் சுழற்சி போனாலும் கூட கிழக்கிலிருந்து காற்றை இழுக்கும் என்பதால் சென்னையில் மழை தொடரும். நேற்றும், இன்றும் கடலோரப் பகுதிகளில்தான் நல்ல மழை பெய்துள்ளது. உட்புற சென்னையில் அவ்வளவு மழை இல்லை. வருகிற நாட்களில் உட்புற சென்னையிலும் நல்ல மழை பெய்யும் என்றார் பிரதீப் ஜான்.
{{comments.comment}}