சென்னை: வங்கக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு பகுதிகளில் நகர இருப்பதால் இன்று சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை பரவலாக மழை பெய்தது.பின்னர் சென்னையில் மாலை வேளையில் நகர் முழுவதும் பனிமூட்டமாக காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் தற்போது வரை தேனாம்பேட்டை, மந்தவெளி,மயிலாப்பூர்தியாகராய நகர், சைதாப்பேட்டை, அடையாறு, எம்ஆர்சி நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல் வட சென்னை பகுதிகளான ராயப்பேட்டை, திருவெற்றியூர், ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.மேலும் சென்னை முழுவதும் மழையுடன் கடுமையான பனிமூட்டமும் நிலவுவதால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் காலையிலேயே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சாலையில் சென்று வருகின்றனர்.
அதே சமயத்தில் இந்த தொடர் மழை காரணமாக அலுவலகம் மற்றும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மழையில் நனைந்தபடியே செல்கின்றனர். திருவள்ளுவர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை உள்ள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் மீனவர்கள் காசிமேடு துறைமுகத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
அதேபோல் புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளிலும் கடல் அலைகள் அதிக சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக வடக்கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}