வட தமிழ்நாட்டை நோக்கி நகர்கிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு.. 18ம் தேதி வரை மழை நீடிக்கும்

Nov 12, 2024,05:24 PM IST

சென்னை: தென்மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 18ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக இலங்கை  கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்பதால் சென்னையில் நவம்பர் 15ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 




அதன்படி  தற்போது அந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழ்நாட்டுக்கு நடுவே நிலை கொண்டுள்ளது. அது தொடர்ந்து வடக்கு தமிழ்நாட்டுக் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக வருகிற 18ம் தேதி வரை மிதமான மற்றும் கன மழை தொடரும்.


சென்னையில் விடிய விடிய மிதமான மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. சென்னை கடற்கரை பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் சீற்றமும் காணப்பட்டது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னையில் தொடர்ந்து மிதமான மழை  பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், எம் ஜி ஆர் நகர், மந்தவெளி, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அடையாறு அண்ணா சாலை, எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், உள்ளிட்ட அனைத்து  இடங்களிலும் அடை மழை பெய்து வருகிறது.


21 இடங்களில் கன மழை


சென்னையில் 21 இடங்களில் 12 மில்லி மீட்டருக்கும் அதிகமாக  மழை பதிவாகியுள்ளது. காலை 10 மணிக்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், ஆகிய ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கலைஞர் மருத்துவமனை டாக்டர் பாலாஜியை குத்தியால் குத்திய.. விக்னேஷ்வரன் மீது 5 பிரிவுகளில் வழக்கு!

news

யாருக்கும் பாதுகாப்பில்லை...அரசு டாக்டர் தாக்குதலுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்

news

திமுக உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்டம் கூடுகிறது.. முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்க!

news

EXCLUSIVE: அண்ணாமலை மாற்றப்பட்டால் அடுத்த தலைவர் யார்?.. பாஜக கையில் 3 ஆப்ஷன்கள்!

news

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து.. எடப்பாடி பழனிச்சாமி, தமிழிசை கண்டனம்

news

டாக்டர் மீதான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது.. இனி இப்படி நடக்காது.. உதயநிதி ஸ்டாலின்

news

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்வோர்.. டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க.. உதயநிதி ஸ்டாலின்

news

பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை.. நாங்க ரொம்ப கிளியரா இருக்கோம்.. எடப்பாடிபழனிசாமி

news

Cooking Tips: சுறுசுறு மீன் குழம்புக்கே டஃப் கொடுக்கும்.. Tasty மண்சட்டி பாகற்காய் குழம்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்