சென்னை : சென்னை பிரஸ் கிளப் எனப்படும் சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்திற்கு கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சட்டசபைத் தேர்தல், நடிகர் சங்கத் தேர்தலின்போது என்ன மாதிரியான பரபரப்பும், விறுவிறுப்பும் நிலவியதோ கிட்டத்தட்ட அதே மாதிரியான சூழல்தான் இந்த தேர்தலிலும் காணப்பட்டது.
1972ம் ஆண்டு துவங்கப்பட்ட சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்திற்கு, 1999ம் ஆண்டு முதல் முறையாக தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதற்கு பிறகு தேர்தலை நடைபெறாமல் இருந்தது. 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இப்போதுதான் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையிலான குழு இந்த தேர்தலை நடத்தியது.
மூத்த பத்திரிகையாளரான மறைந்த மோகன் உள்ளிட்டோர் மேற்கொண்ட வழக்கு, சட்டப் போராட்டத்தின் விளைவாக தற்போது சென்னை பிரஸ் கிளப்புக்கு தேர்தல் நடந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் 1502 பேர் வரை உறுப்பினர்களாக உள்ளனர். டிசம்பர் 15ம் தேதியான நேற்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி, நடைபெற்றது. இதில் மொத்தம் 91.21 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகின. 1371 பேர் இந்த தேர்தலில் வாக்களித்த நிலையில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்து, ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் சுரேஷ் வேதநாயகம் (தினகரன்) 659 ஓட்டுக்கள் பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 599 ஓட்டுக்கள் பெற்ற மதன் (நியூஸ் 18 தமிழ்நாடு) மற்றும் சுந்தர பாரதி (புதிய தலைமுறை) ஆகியோர் துணை தலைவர்களாகவும், 734 ஓட்டுக்கள் பெற்ற அசீப் முகமது (அரண் செய்) பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட மணிகண்டன் (ஜெயா டிவி) 803 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நெல்சன் சேவியர் (ஒன் இந்தியா தமிழ்) துணை செயலாளர், அகிலா ஈஸ்வரன் (தி இந்து) பழனிவேல் (பாலிமர் டிவி), விஜய கோபால் (ஏஎன்ஐ), பி.ஸ்டாலின்(புதிய தலைமுறை டிவி), கவாஸ்கர் (தீக்கதிர்) ஆகியோர் சங்க உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இத்தேர்தலில் ஒற்றுமை அணி, நீதிக்கான அணி மற்றும் மாற்றத்திற்கான அணி என 3 அணிகளும், சுயேச்சையாக சிலரும் என 40க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர். வெற்ற பெற்ற நிர்வாகிகளில் கவாஸ்கர் மட்டும் ஒற்றுமை அணியைச் சேர்ந்த வேட்பாளர். மற்ற அனைவருமே நீதிக்கான அணி சார்பில் போட்டியிட்டவர்கள்.
வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு பாஜக தலைவர் கே. அண்ணாமலை, அமமுக தலைவர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வாக்குப் பதிவு நடந்த பிரஸ் கிளப் பகுதியில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் தேர்தல் நடந்து முடிந்துள்ளது பத்திரிகையாளர்களுக்கு பெருத்த மகிழ்வைக் கொடுத்துள்ளது. மேலும் புதிய நிர்வாகம் அமைந்திருப்பதால் பத்திரிகையாளர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் நல்ல தீர்வுகள் கிடைக்க இந்த நிர்வாகம் உழைக்கும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
{{comments.comment}}