சென்னையில் 1 வயது குழந்தை கடத்தல்..  4 மணி நேரத்தில் மீட்ட போலீசார்!

Oct 16, 2023,02:17 PM IST


சென்னை:    சென்னை ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 1 வயது ஆண் குழந்தையை  4 மணி நேரத்தில் விரைந்து மீட்டு  அசத்தியுள்ளனர் சென்னை போலீஸார்.


பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகளிலிருந்து குழந்தைகள் கடத்தப்படுவது அடிக்கடி நடக்கும். காரணம், கண்காணிப்பு சரியாக இல்லாத குழந்தைகளை திருடுவதற்கென்றே பல கும்பல்கள் உள்ளன. பெரும்பாலும் பெண்கள் அல்லது வயதானவர்கள்தான் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதுதான் இந்த கடத்தல் கும்பல்கள் கடைப்பிடிக்கும் டெக்னிக் ஆகும். இவர்கள் நேக்காக குழந்தைகளை தூக்கிக் கொண்டு வந்து விடுவார்கள் என்பதாலும், யாருக்கும் சந்தேகம் வராது என்பதாலும் இதுதான்  கடத்தல் கும்பல்கள் கடைப்பிடிக்கும் டெக்னிக் ஆக உள்ளது.




இப்படித்தான் ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. ஒடிசாவில் இருந்து நந்தினி கண்காகர்-லாங்கேஸ்வர்  தம்பதியினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். இரவு நேரம் என்பதால் ரயில் நிலையத்திலேயே  தங்களது ஒரு வயது குழந்தையுடன் தங்கினர். நள்ளிரவில் விழித்து பார்த்த தம்பதியினர் குழந்தையை காணாமல் தேடியுள்ளனர். அங்கும் இங்குமாக தேடியும், குழந்தை கிடைக்காத காரணத்தினால் பதற்றமடைந்த தம்பதியினர் உடனடியாக அருகில் இருந்த காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். 


புகாரின் பேரில் உடனடியாக ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிந்திருந்த காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். சிசிடிவி புட்டேஜில் ஒடிசா தம்பதியிந் குழந்தையை இருவர் கடத்தியது தெரியவந்ததது.  இதன் அடிப்படையில் காவல்துறையினர் குழந்தையை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது.


கிட்டத்தட்ட 4 மணி நேர தேடுதலுக்கு பின் குழந்தையை கண்டுபிடித்து விட்டனர் குன்றத்தூர் பகுதியில் வைத்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. குழந்தையைக் கடத்தி வந்தது ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்: தவெக தலைவர் விஜய்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

தங்கம் வாங்க இதுவே தங்கமான நேரம்... தொடர் குறைவில் தங்கம் விலை!

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 08, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

வெஜ் பிரியாணிக்கு பதிலாக.. நான்வெஜ் கொடுத்த ஸ்விக்கி.. ஹோட்டல் உரிமையாளர் கைது..!

அதிகம் பார்க்கும் செய்திகள்