சென்னை: "ஊட்ல சொல்லிட்டு வன்ட்டியா மாமே".. இது சென்னையில் சாலையில் குறுக்கே பாய்வோரைப் பார்த்து வாகனதாரிகள் வீசும் கோப வார்த்தை. இதை வைத்தே ஒரு சூப்பர் விழிப்புணர்வு வீடியோவைப் போட்டுள்ளது சென்னை மாநகர காவல்துறை.
சாலையில் நடப்பதும், வாகனங்களில் செல்வதும் இப்போது சர்க்கஸ் செய்வது போலாகி விட்டது. பெருகி விட்ட மக்கள் தொகையாலும், அதிகரித்து விட்ட வாகனங்களாலும் எப்போதும் எல்லா சாலைகளிலும் போக்குவரத்து நெருக்கடி கொடுமையாக இருக்கிறது.
நடப்பதும் சிரமமாக உள்ளது. காரணம் பல சாலைகளில் முறையான பிளாட்பாரம் இல்லை. சாலைகளில்தான் பலர் நடக்கிறார்கள். சாலைகளிலும் வாகனங்கள் முறையாகப் போவதில்லை. எல்லோருமே ரேஸில் போவது போலத்தான் அதி வேகமாகப் பாய்கிறார்கள்.
நிறுத்தி நிதானித்து பொறுமாயாக செல்ல யாருக்கும் மனம் இல்லை, நேரமும் இல்லை. எல்லாமே வேகம்தான்.. எல்லோருக்குமே அவசரம்தான். இப்படிப்பட்ட வேகம்தான் பல நேரங்களில் விபத்துக்குக் காரணமாகி விடுகிறது. பலரின் உயிரையும் காவு வாங்கி விடுகிறது. இந்த நேரத்தில்தான் சென்னை மாநகர காவல்துறை அருமையான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில்,
உங்க ஒரு நிமிஷ அவசரம்...
ரோட்ல பல பேர் கனவை சிதைச்சிடும்...
அதனால,
வீட்ல சொல்லிட்டு வாங்க...
ரோட்ல பார்த்து போங்க....
Don't drive on the wrong side என்ற அழகான கேப்ஷனும் கொடுத்துள்ளனர். நீங்களும் வீடியோ பாருங்க.. நிதானமா போங்க.. உங்க வீட்டில் மட்டுமல்ல, உங்களைப் போல சாலைகளில் செல்லும் மற்றவர்களின் வீடுகளிலும் கூட அவர்களுக்காக குடும்பத்தினர் காத்திருப்பார்கள்.
https://twitter.com/ChennaiTraffic/status/1707236657978851754
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
{{comments.comment}}