சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு ரெட் அலர்ட்.. 3 நாள் வெளியே வராதீங்க.. போலீஸ் அட்வைஸ்!

Dec 03, 2023,06:00 PM IST

சென்னை : சென்னைக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள மிச்சாங் (மிக்ஜாம்) புயல், அதிதீவிர புயலாக ஆந்திரா அருகில் டிசம்பர் 05ம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனால் மூன்று நாட்களுக்கு யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை போலீசார் பொது மக்களை அறிவுறுத்தி உள்ளனர். மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இங்கு 200 மில்லி மீட்டர் அளவுக்கு மிக அதிக கன மழை பெய்யும் என்று அர்த்தம்.


சென்னை போலீசார் வெளியிட்டுள்ள தகவலின் படி, இன்று பிற்பகல் முதல் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால், புயல் கரையை கடந்து விட்டது. இனி ஆபத்து இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் வரை அடுத்த 3 நாட்களுக்கு பொது மக்கள் யாரும் அவசியம் இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் மழைநீரில் வாகனங்களை இயக்க வேண்டாம். அதிக மழை பெய்யும் சமயங்களில் எலக்ட்ரானிக் சாதனங்கள் எதையும் பயன்படுத்த வேண்டாம். 




மரங்களுக்கு கீழே வாகனங்களை நிறுத்த வேண்டாம். காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கட்டுமான பணிகளில் ஈடுபடுவோர் கிரேன் போன்ற இயந்திரங்களை பத்திரமாக நிறுத்தி வைக்க வேண்டும்.  வெல்டிங் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டாம். தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



சென்னையில் கனமழை காரணமாக பேரிடர் மீட்புக் குழு ஏற்கனவே சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து மேலும் 100 பேர் கொண்ட குழு சென்னை வந்துள்ளது. படகுகள் போன்ற மீட்பு, பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.


Michaung புயல் எதிரொலி... சென்னை, ஆந்திரா வரும் 54 ரயில்கள் ரத்து

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்