நடிகை திரிஷா குறித்த பேச்சு.. நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு.. 2 பிரிவுகளில் எப்ஐஆர்!

Nov 21, 2023,07:59 PM IST

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் மீது நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.


தனியார் யூடியூப் சானலுக்கு அளித்த பேட்டியின்போது லியோ படத்தின் நாயகி திரிஷா குறித்து வில்லனாக நடித்த மன்சூர் அலிகான் சில கருத்துக்களைக் கூறியிருந்தார். அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. திரிஷா தவிர, குஷ்பு, ரோஜா உள்ளிட்டோர் குறித்தும் அவர் பேசியிருந்தார். அவை முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருந்ததால் கடும் கண்டனங்கள் குவிந்தன.


மன்சூர் அலிகானுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் என்று பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தை தானாக முன்வந்து கையில் எடுத்தது. மன்சூர் அலிகான் மீது  வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சங்கர் ஜுவாலுக்கு ஆணையம் கடிதம் அனுப்பியது.




இந்த நிலையில் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.


இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:




நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா கிருஷ்ணன் என்பவர் குறித்து கன்னியத்தை குறைக்கும் வகையில் மிகவும் அநாகரிகமான முறையில் அவமானப்படுத்தி, பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் (X-Twitter) பரவியது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல் W-1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று (21.11.2023) நடிகர் மன்சூர் அலிகான் மீது 354 (A), 509 இதச ஆகிய 2 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கு தொடர்பாக அடுத்து மன்சூர் அலிகான் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் கைது செய்யப்படுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


பேசியது தப்பு.. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும்.. பாரதிராஜா அதிரடி


"நடிகர் சங்கத்துக்கு 4 மணி நேரம் டைம் தர்றேன்"..  அதிர வைத்த மன்சூர் அலிகான்!

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்