சூடான நேரத்தில் கூலான அப்டேட்.. இன்று மழை இருக்கும்.. ஆனால்  நாளை முதல் வெயில் வெளுக்கும்!

Apr 03, 2024,04:20 PM IST

சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். மேலும் இப்பகுதியில் நாளை முதல் மார்ச் ஏழு வரை வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வெயில் கொளுத்தும் இந்த நேரத்தில் குட்டி பிரேக் போல.. தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்பார்க்கலாம்.


அதே நேரத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிகாற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் இடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில்  வீசக்கூடும். இதனால் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.




சென்னையைப் பொறுத்தவரை சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 35 -36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.


ஏப்ரல் 4ம் தேதி


மக்கள் இன்று சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கலாம்.. ஆனால், நாளை (4.4.24)தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவுமாம். அதே நேரத்தில் தென் தமிழக மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடுமாம்.


ஏப்ரல் 5 முதல் 7ம் தேதி வரை


தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!

news

சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

அதிகம் பார்க்கும் செய்திகள்