மெரீனாவிலிருந்து மெட்ரோவில் குவிந்த மக்கள்.. திணறும் ரயில் நிலையங்கள்.. 3 நிமிடத்திற்கு ஒரு சர்வீஸ

Oct 06, 2024,03:04 PM IST

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த வான்வெளி சாகச நிகழ்ச்சியைக் கண்டு களித்த லட்சக்கணக்கான மக்களும் தற்போது வீடு திரும்பி வருவதால் ரயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கித் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.


சென்னையில் இன்று விமானப்படை சார்பில் வான்வெளி சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. முற்பகல் 11 மணியிலிருந்து 1 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் கிட்டத்தட்ட 15 லட்சம் மக்கள் மெரீனா கடற்கரையில் குழுமி கண்டு மகிழ்ந்தனர். மக்களின் வசதிக்காக கூடுதல் ரயில், எம்ஆர்டிஎஸ், மெட்ரோ மற்றும் பஸ்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இது போதவில்லை.




குறிப்பாக மெட்ரோ ரயில் நிலையங்களிலும் எம்ஆர்டிஎஸ் எனப்படும் மாடி ரயில்களிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது. இதையடுத்து தற்போது மெட்ரோ சேவையானது 3 நிமிடத்திற்கு ஒரு ரயில் என்ற அளவில் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வண்ணாரப்பேட்டை மற்றும் ஏஜி டிஎம்எஸ் இடையே 3.5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. அதேபோல விம்கோநகர் - ஏர்போர்ட் மெட்ரோ இடையே 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.


புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்டிரல் மெட்ரோ - புனித தாமஸ் மலை இடையிலான  சேவை வழக்கம் போல 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டது.  கூட்ட நெரிசல் நிலவும் வரையில் இந்த நேர மாற்றம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீபாவளி 2024 : பாரம்பரிய முறையில் எண்ணெய் வைத்து குளிக்க இதுதான் நல்ல நேரம்!

news

Monsoon: சூடு பிடிக்கும் மழைக்காலம்.. நோய்களைத் தவிர்ப்பது எப்படி.. மாணவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்!

news

அக்டோபர் 30 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

கடக ராசிக்காரர்களே.. வெற்றி வாசல் தேடி வரும்.. தனுசு ராசியா.. உஷாரய்யா உஷாரு!

news

நவம்பர் 1ம் தேதி.. 11 மாவட்டங்களில் பரவலாக கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!

news

Draft electoral Roll: தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய தொகுதி சோழிங்கநல்லூர்.. சிறிய தொகுதி கீழ் வேளூர்!

news

அதிமுகவை தவெக தலைவர் விஜய் விமர்சிக்காதது ஏன் தெரியுமா?.. எடப்பாடி பழனிசாமி பலே விளக்கம்!

news

பத்தவச்சுட்டியே பரட்டை.. விஜய் பேச்சால் சலசலப்பு.. கப்சிப்பாக்க அதை கையில் எடுக்குமா திமுக?

news

Deepavali Rush: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை.. நாளை நீட்டிப்பு.. இரவு 12 மணி வரை இயங்கும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்