சந்தோஷ் நாராயணன் கச்சேரிக்குப் போறீங்களா.. மெட்ரோ ரயில் தரும் ஆபரை யூஸ் பண்ணிக்குங்க!

Feb 10, 2024,10:07 AM IST

சென்னை:  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நடத்தும் நீயே ஒலி இசை நிகழ்ச்சிக்கு செல்வோருக்காக சென்னை மெட்ரோ நிறுவனம் பயணச் சலுகையை அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:


ஸ்போர்ஃபி செயலி மற்றும் இணையதளம் மூலம் நிகழ்வு சீட்டு வாங்கியவர்கள் சந்தோஷ் நாராயணனின் நீயே ஒலி இசை நிகழ்ச்சிக்கு செல்ல மேக்கிங் மொமெண்ட்ஸ் நிறுவனம் தடையில்லா மெட்ரோ பயணத்தை வழங்குகிறது




சென்னை, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் உள்ள நேரு அவுட்டோர் ஸ்டேடியத்தில், 10.02.2024 அன்று  “சந்தோஷ் நாராயணனின் நீயே ஒலி இன்னிசை கச்சேரி” நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு நிறுவனமான மேக்கிங் மொமென்ட்ஸ் உடன் இணைந்து மெட்ரோ சிறப்பு சேவையை வழங்குகிறது.


மேக்கிங் மொமண்ட்ஸ் நிறுவனமானது “சந்தோஷ் நாராயணனின் நீயே ஒலி இன்னிசை கச்சேரி” நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு நிகழ்ச்சிக்கான நிகழ்வு சீட்டில் மெட்ரோவில் கூடுதல் கட்டணமின்றி பயணிப்பதற்கான QR-யை வழங்கியுள்ளது. ஸ்போர்ஃபி செயலி மற்றும் இணையதளம் மூலம் நிகழ்ச்சிக்கான நிகழ்வு சீட்டை முன்பதிவு செய்த பங்கேற்பாளர்கள் அருகில் உள்ள மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திற்குச் சென்று நிகழ்ச்சியை கண்டுகளித்து மெட்ரோ வழியாக அவர்கள் இடத்திற்கு திரும்புவதற்கு இந்த நிகழ்வு சீட்டு உதவும். 


இந்த நிகழ்வு சீட்டை ஒரு சுற்றுப்பயணத்திற்குப் பயன்படுத்தலாம் (2 நுழைவு & 2 வெளியேறு). மெட்ரோ நிலையங்களில் உள்ள தானியங்கி வாயில்களில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் இந்த நிகழ்ச்சிக்கான நிகழ்வு சீட்டை ஸ்கேன் செய்யலாம்.


ஒரு  நிகழ்வு சீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் முன்பதிவு செய்திருந்தால், அவர்கள் ஒரே குழுவாக இணைந்து நுழைவு மற்றும் வெளியேறுவதற்கு பயன்படுத்தலாம்.


ஸ்போர்ஃபி அல்லாது வேறு எந்த முன்பதிவு இணையதளம், செயலி மற்றும் சுயமாக நிகழ்வு சீட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் இந்த ஸ்பான்சர் பயணத்தில் பயணிக்க இயலாது, அவர்கள் மெட்ரோ பயணச்சீட்டுகளை டிஜிட்டல் வழி மூலமாகவோ அல்லது அருகிலுள்ள நிலையங்களிலோ வாங்கி நிகழ்ச்சிக்கு பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.


பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும், மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் இதுபோன்ற ஒத்துழைப்பை வழங்க சென்னையில் உள்ள மற்ற பெரிய நிகழ்வு அமைப்பாளர்களையும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அழைக்கிறது என்று மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

அதிகம் பார்க்கும் செய்திகள்